பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

3


ஏகினன் யமதருமராஜனும், தனது இருப்பிடம் போய்த் தனது பிரதம மந்திரியும் தூதனும் பிரதிநிதியுமாகிய காலனைக் கூவி “கால! கண்ணபுரத்துள்ள கடோர சித்தனுக்குக் காலங் கிட்டிவிட்டது. அவனை உடனே ஈண்டுக் கொணருதி. தாமதிக்க வேண்டாம்” என ஏவினன். காலனுங் கண்ணபுரத்துக்குக் கடுகினன். கடோர சித்தன் வீட்டிற் புகுந்தனன். அப்போதுதான் கடோர சித்தன் கூடத்தில் கட்டிலின் மீது சட்ட திட்டமாய் வீற்றிருந்து பாலும் பழமும் உண்னும் நிலையில் இருந்தனன். உள்ளே துழைந்த காலன் “புறப்படடா கள்ளா”  ! எனக்கூறி வெருட்டாது “அப்பனே, முத்தமிட்டேன் உன்னை” எனக் கூறி நெருங்கினன். யாருக்கும் அஞ்சாத கடோரசித்தனும் காலனார் கோரவுருவைக் கண்டு கலங்கினன் சிறிது. கலங்கி “யாரப்பா நீ?” என வினவினன். அதற்குக் காலன் “நீ கடைசியாய்க் குடிக்கக் கொடுத்து வைத்த பாலைச் சீக்கிரங் குடி; நான்தான் காலன்” என விடை பகர்ந்தனன். இதைக் கேட்டதுங் கடோர சித்தன் ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு “அப்படியா! இவ்வளவு அழகிய திருகோலத்தையும், கருணை உள்ளத்தையும், இனிய வசனத்தையுங் கொண்ட தங்களையா இந்தப் பாழு மனிதர்கள் "பாவி கொடுங்காலன்” எனத் தூஷிக்கின்றனர். எப்படிப் பட்ட பொல்லா நோயையும் போக்க வல்ல புண்ணிய புருஷர் ஆயிற்றே தாங்கள். என் சிறு குடிலுக்குத் தாங்கள் வரும்படியான பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததே! தங்கள் மொழிக்கு எதிர் மொழி உண்டோ? இதோ உடனே வருகிறேன்; ஆனால் தாங்கள் சற்று இளைப்பாற லாமே. இதோ! இந்த நாற்காலியில் சற்று உட்கார