பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

5


ஒடுகின்றாய் ; கொழுந்துவிட் டெரியும் தீயிடையே பறக் கின்றாய்; சுழற்காற்று போலச் சுழல்கின்றாய்: நீ செல்லும் இடமெல்லாம் கண்ணீரும் அழு குரலும் வெறுப்பும், சாபமும், நிந்திப்பும் தான். குழந்தை யென்று பார்க்கின்றா யில்லை, குமரியென்று விடுகின்றாயில்லை. இன்று பிறந்த சிசுவும் ஒன்றே. நூறு வயது சென்ற கிழவனும் ஒன்றே. அங்க ஈனனும் ஒன்றே அங்க அழகியும் ஒன்றே. பசுபாதம் உனக்குக் கிடையாது. ஆதலால், உங்கள் தலைவர் யமதரும ராஜருக்கு “நடுவன்” என்றொரு பெயர் உண்டு. இப்போது இந்த நாற்காலியின் மத்தியில் இருப்பதால் உனக்கும் “நடுவன்” என்ற பெயர் வருமல்லவா? நீ கூலியில்லாத வேலையாள்; பங்கில்லாத கொள்ளைத் தலைவன்; காரண மில்லாத கொலையாளி. இங்கனம் வீணாய் ஏன் உன் காலத்தை யாவரும் வெறுக்கக் கழிக்கின்றாய். உன்னை யாவரும் விரும்ப வேண்டும் என்னும் ஆசை உனக் கில்லையா? பிராணிகள், நரகலோகத்தை நிரப்பா விட்டால் உனக்கென்ன கெட்டுப் போயிற்று ? உனக்குக்கான் விருப்புங் கிடையாது வெறுப்புங் கிடையாதே. வீணாய் அலையாமல் இங்கேயே இரு”, என்றனன். காலனும் “இவன் சொல்வது நியாயமாகத்தான் தோன்றுகின்றது. ஒரிடமா யிருத்தல் சுகமாகத்தான் இருக்கும்” எனத் தேர்ந்து கடோர சித்தனுடன் இணங்கி இருந்தனன்.

கடோர சித்தனுங் காலன் அகமகிழ்ந் திருத்தற்கு வேண்டிய அநேக வேடிக்கைக் கதைகளையும் நீதிகளையும் தினத்தோறுஞ் சொல்லுவான்; அவனுக்கு வேண்டிய ருசியுள்ள உணவுகளையும், தின்பண்டங்களையும் பானங்