பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவை நோன்பு 3蚤” AAAAAA AAAA AAAA AAAA AAAA AAAAS AAAAAS AA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAA கதிரவன் தோன்றுவதற்கு முன்னர் மகளிர் நீராடித் தேவி வழிபாடு செய்து நோற்கும் நோன்பு குறித்துச் சைவர்களால் ஒரு தத்துவம் கூறப்படுகின்றது. அவர்கள் கொள்கைப்படி ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடிய இரவும், தை மாதம் முதல் ஆனி மாதம்முடியப் பகலு: மாகத் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். சங்கார காலத் திற்கும் படைப்புக் காலத்திற்கும் பிரமாணமாக இந்த ஆறு மாதமும் பிரிந்து நடக்கும். மார்கழி மாதம் உதய காலமாக நின்று படைப்புக்கு ஏதுவாக இருக்கும். இக் காலத்தில் மனேன்மணி முதல் வாமை ஈருகவுள்ள நவ சக்திகளும் ஒருவரை யொருவர் பிரேரிக்க, அசுத்த மாயை காரியப்பட்டு மண் ஈருன பிரபஞ்சங்கள் உண் டாகும். இங்ஙனம் ஒரு சக்தி ஒரு சக்தியை எழுப் புதலே திருவெம்பாவையின் தத்துவக் கருத்து என்பது சைவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. வைணவர்கள் பகவத்கீதையில் கண்ணன் தன்னை “மாதங்களில் மார்கழியாகக் கூறியிருப்பதைத் தத்துவ மாகக் கொண்டுள்ளனர். சிறந்த பொருள்களிலெல்லாம் சிறந்த பொருள் பரம்பொருளாகிய நானே' என்று கூறிய கண்ணன் கூற்றை ஆதாரமாகக் கொண்டுதான் வைண. வர்கள் மார்கழி மாதத்தைச் சிறப்பாக மதிக்கின்றனர். என்று கருதவேண்டியுள்ளது. மூன்ருவதாக: பாகவதத்தில் தசம ஸ்கந்தம் 21ஆம் அத்தியாயத்தில் கண்ணன் கோபியரின் துயில் கவர்ந்த வரலாறு கூறப்பெறுகின்றது. அதில் மார்கழி நோன்பு பற்றிய முக்கியமான செய்திகள் வருகின்றன. பெண்கள் மார்கழி மாதத்தில் காத்தியாயனி விரதம் தொடங்கி அத்தேவியின் உருவம் அமைத்து ஒரு மாத காலம் பூசை செய்து வரும் வழக்கம் இருந்து வந்ததாகத் தெரி கின்றது. இவ்விரத காலங்களில் கோகுலத்துப்