பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

காலமும் கவிஞர்களும்


பெண்கள் வைகறையில் துயிலெழுந்து கிருஷ்ண சரித்திரங்களைப் பாடிக்கொண்டு நீராடுவர் என்று தெரிகின்றது. இதே கருத்தைத்தான் பெரியவாச்சான் பிள்ளேயும் தமது வியாக்கியானத்தின் அவதரரிகையில் குறித்துள்ளார். ஆனால், பாகவதத்திலுள்ள ஆதாரத்தை அவர் குறிக்கவில்லை. திருவெம்பாவையின் பாடல்களே நோக்கும்பொழுது, மார்கழி மாதத்தில் கோகுலத்துப் பெண்கள் ஒருவரை யொருவர் அதிகாலையில் துயிலெழுப்பி நீராடிக் கண்ணனைக் கணவனாக அடைய வேண்டியது போலவே, திருவண்ணாமலேயிலுள்ள பெண்கள் ஒருவரையொருவர் அதிகாலையில் துயிலெழுப்பி நீராடிச் சிவனடியாரைத் தம் கணவர்களாக அடைய வேண்டும் என்று நோற்பதை உணர்த்துகின்றது. ஆகவே, இரண்டு பிரபந்தங்களும் காத்தியாயணி தேவியின் விரதத்தை உணர்த்துவதாகவே கொள்ளலாம். பதிநான்காம் திருவெம்பாவையில்,

" பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்"

என்று பராசக்தியைச் சிறப்பாக வணங்கியுள்ளனர். 'முன்னிக் கடலை' (திருவெம். 16) என்ற பாட்டில் பராசக்தி உவமையாகத் கூறப்பெற்றுள்ளாள். அன்றியும், திருவெம்பாவையின் தலைப்பில் சக்தியை வியந்தது என்ற குறிப்பும் காணப்பெறுகின்றது. இம் மூன்று காரணங்களாலும் திருவெம்பாவை சக்தியின் நோன்பைத்தான் குறிக்கின்றது என்ற கொள்கை வலியுறுகின்றது என்று திரு. மு. இராகவய்யங்கார் அவர்கள் குறிப்பிடுவர்.

நான்காவதாக : இரண்டு பிரபந்தங்களிலும் மகளிர் ஒருவரை யொருவர் துயிலுணர்த்தும் காட்சிகள் கூறப்------------- 4 ஷெ ஆராய்ச்சித் தொகுதி.