பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காலமும் கவிஞர்களும் k” x. g °, & ۰" ... " ۱۷ س. - - - " و " ، " سه" ASAAASAAA SASAASAAAAASA SAASAASSAAAASSSS S S திருவண்ணுமலையில் மார்கழி மாதத்தில் வைகறைப் பொழுதில் நீராடும் பெண்களின் வாய்மொழியாக மழை வரம் வேண்டுகின்ருர். " முன் இக் கிடலச் சுருக்கி யெழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்துஎம் பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நம்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே. என்னப் பொழியாய்!” (திருவெம்-16.) (முன்-எதிரேயுள்ள; சுருக்கி-வற்றச் செய்து, எழுந்துமேலே கிளம்பி ; உடையாள்-எம்மையுடைய உமாதேவி ; இட்ட இடை"சிறிய இடுப்பு (இட்ட-குறுகிய); பொலிந்துபிரகாசித்து: பிராட்டி-தலைவி; சிலம்பின்-சிலம்பைப்போல் ; சிலம்பி-ஒலித்து; குலவி-விளங்கப்பெற்று.) என்பது அடிகள் அவர்களின் வேண்டுகோள். மழை வரம் வேண்டி நிற்கும் வைணவ பக்தராகிய ஆண்டா ளின் மனக் கண்ணுக்கு முன்னே திருமால் உருவம் காட்சியளிப்பதுபோலவே, மழைவரம் வேண்டும் சைவ அடியாராகிய மணிவாசகப் பெருமானின் மனக்கண் முன் ஐயனே விட்டுப் பிரியாத அம்மையின் வடிவம் தோன்றுகின்றது. அன்றியும், பெண் பக்தரின்முன் கடவுளின் வடிவம் ஆண்பாலாகத் தோன்றுவதும், ஆண் பக்தரின் முன் கடவுளின் உருவம் பெண்பாலாகத் தோன்றுவதும் சிந்தித்து மகிழ்வதற்குரிய செய்தியாகும். கடலில் நீர் முகந்துகொண்டு வானத்தில் பரவிக் கிடக்கும் கார்மேகத்தின் காட்சி நீலநிறத்தையுடைய அம்மையின் திருமேனியை நினைவு படுத்துகின்றது. மேகங்களுக்கிடையே தோன்றிப் பொலியும் மின் வெட்டு, தேவியின் சிறிய இடையை நினைவூட்டுகின்றது.