பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 காலமும் கவிஞர்களும் ASA SSASAS SS SAAAAAA AAAA AAAA AAAA AAAA AAAMAMMMA SAM மதிசேர் நாள் மீன்போல” எனவரும் அடிக்கு உரையாசிரியர் திங்களைச் சேர்ந்த நாளாகிய மீன ஒப்ப” எனக் கூறும் உரையாலும் இதனை அறியலாம். கோள்களின் இயக்கத்தால் இயற்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அவர்கள் நன்கு அறிந் திருந்தனர். வெள்ளி ஒரு மழைக்கோள். அது தெற்கே விலகியிருப்பது மழையில்லாமைக்கு அறிகுறியாகும் என்பதை.

  • வெள்ளி தென்புலத் துறைய விளைவயல்

பள்ளம் வாடிய பயனில் காலை” என்ற மள்ளனர் பாட்டின் பகுதி சுட்டுகின்றது. இதைப் போலவே வால் வெள்ளி தோன்றுவதும், சனிமீன் புகைவதும் எரிகொள்ளி வீழ்தலும் தீக்குறிகளாகக் கொள்ளப் பெற்றிருந்தன. இவற்றை, மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென்திசை மருங்கில் வெள்ளி ஒடினும் வயலகம் நிறையப் புதற்பூ மலர என்ற அடிகளால் அறியலாம் ; 'சனி கரியநிறமுடைய ளுதலின் மைம்மின் என்ருர் : சனி புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றேடு மாறுபடுதல் ; இவற்றுள் சனி தனக்குப் பகை வீடாகிய சிங்கராசியிற் புகின் உலகிற்குப் பெருந்தீங்கு விளைவிப்பான் என்பதை மகத்திற் புக்கதோர் சனியெனக் காணுய்...(தேவாரம்) என்பவற்ருல் உணர்க : (விண்மீன்களுள் மகம், பூரம், உத்திரத்தின் முதற்பாதம் சிங்கராசிக்கு உரியவை) ; தூமம் புகைக்கொடி என்றும் கூறப்படும் ; தூமகேது என்பதும் இதுவே ; இது வட்டம், சிலே, 3 புறம்.117. 4. புறம்-388