பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு ! O } நுட்பம், தூமம் என்னும் கரந்துறை கோள்கள் நான்கனுள் ஒன்று ; இதன் தோற்றம் உலகிற்குப் பெருந் தீங்கு விளைவிக்கும் என்பர்” என்ற இவற்றின் உரைப் பகுதி இதனை நன்கு விளக்குகின்றது.

  • மிகவானுள் எரி தோன்றினும்

குளமீளுெடுந் தாட்புகையினும்' என்ற அடிகளும் "எரி, குளமீன், தாள் என்பன வான் மீன் விசேடங்கள் ; இவை முறையே தோன்றுதலும் புகைதலும் உலக வறுமைக்கு ஏதுக்கள்” என்ற அவற்றின் உரைப் பகுதியும் உணர்த்துகின்றன. இக் கருத்துக்களையே இளங்கோ அடிகள் காவிரியின் சிறப்பைக் கூறுமிடத்து,

  • கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்' என்று குறிப்பிடுகின்ருர். சங்கப் புலவர்களில் ஒரு சிலர் கணியர்களாகவும் இருந்தனர். கூடலூர்கிழார் என்ற புலவர் ஒரு கணி. அவர் வானத்தில் ஒரு விண்மீன் தீப்பரக்கக் காற்ருல் பிதிர்ந்து கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். அம் மீன் விழுந் ததனுல் அரசனுக்குக் கேடுவரும் என அஞ்சினர். அஞ் சினபடியே ஏழாம்நாள் கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை விண்ணுடு புக்கான். இதனை அவர் புறம் 229இல் குறிப்பிடுகின்ருர். " ஆடியல் அழற்குட்டத்து ஆரிருள் அரையிரவின் முடப்பனேயத்து வேர் முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் 5 புறம்-395 6 சிலப்-நாடுகாண்-வரி 102-103