பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 காலமும் கவிஞர்களும் SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASMMMS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAA AAAAMeSAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS என்று கருதலாம். இன்று வளர்ந்துள்ள அளவு அன்றைய அறிவு இருந்ததா என்பதை எடுத்துக்காட்டற்குரிய சான்றுகள் ஒன்றும் கிடைக்கவில்லை. இலக்கியங்களில் காணும் குறிப்புக்களால் ஊகிக்கலாமேயன்றி அறுதி யிட்டு உரைக்க இயலாது. உயிரியல் : இன்று உயிரியல் துறையில் டார்வின் போன்ற அறிஞர்களால் குறிப்பிடப்பெறுவது கூர்தல் <opth (Doctrine of Evolution) 6T63rug. 33.jujo off வியல் அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இல்லாமல் இல்லை. இத்தகைய கொள்கை போன்றதொரு கருத்தினே, “ புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளேத்தேன்’’’ என்று மணிவாசகப் பெருமானும் கூறியுள்ளார். பெளதிக இயல் : பெளதிக இயல்பற்றிய ஒரு சில கருத்துக்களையும் இலக்கியங்களில் காணலாம். மேலே செல்லச் செல்லக் காற்று இலேசாயிருக்கும் என்பது பெளதிக உண்மை. இதைக் கம்பன் மிக சமத்காரமாகக் கூறுகின்ருன். இலங்கையிலுள்ள மாளிகைகள் தேவர் உலகை எட்டும்படியான நிலையில் உள்ளன. மேருவையும் வருத்தக்கூடிய வாயு அந்த உயரமான இடங்களில் தென்றலாய் வீசுகின்றதாம். 8 திருவாசகம் : சிவபுராணம்-வரி (26-31).