பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j () 8 காலமும் கவிஞர்களும் (காடி-கஞ்சி ; தராய்ச்சாறு-பிரமிச்சாறு ; கன்னல்மணிகருப்புக்கட்டி , வாயுறிஇ-வாயில் உறுத்தி ; பெருக-பெரிதா கும்படி ; உகிர் உறுத்தி.நகத்தால் அகலமாகும்படிசெய்து ; அண்ணு-உள்நாக்கு.) இப் பாடலில் குறிப்பிடப்பெறும் செய்திகளை எண்ணி எண்ணி உணர்க. நவீன மருத்துவர்களும் அறியாத எவ் வளவு செய்திகள் இதில் காட்டப்பெறுகின்றன. அறிவியல் செய்திகள் யாவும் மனத்தைப் பற் றியவை ; இலக்கியச் செய்திகள் யாவும் உணர்வை அடிப்படையாகக் கொண்டவை. அறிவியல்பற்றிய தனி நூல்கள் தோன்றியிருந்து அவை நமக்குக் கிடைக்கு மாயின் பல்வேறு நுட்பமான அறிவியல் துறைபற்றிய செய்திகளை நாம் அறிந்துகொள்ளலாம். அத்தகைய நூல்கள் நமக்கு இதுகாறும் கிடைக்கவில்லை. உணர்வை அடிப்புடையாகக் கொண்ட இலக்கிய நூல்களில் அறிவு பற்றிய செய்திகளே அதிகமாக நுழைத்தற்கு வாய்ப்பு எங்ங்ணம் இருத்தல் முடியும்? எனவே, மேற்காட்டிய ஒருசில சான்றுகளைக் கொண்டு பண்டைத் தமிழர்களின் அறிவியல் அறிவை ஒருவாறு ஊகித்து உணர்ந்து கொள்வதே இன்றைய தமிழர்களின் கடமையாகும்.