பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 காலமும் கவிஞர்களும் களின் கலப்புத் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆல்ை , தமிழ் வளரும் புதிய புதிய துறை களில் எல்லாம் தமிழின் உயிர் நாடி பேச வேண்டும் ; சங்க இலக்கியங்களில் கொலுவிருக்கும் அரசிளங் குமரியின் அதிகார முத்திரை பெறவேண்டும் ; அதாவது தமிழ் தமிழாக வளர வேண்டும். இவ்வாறு தமிழ்மொழி .யில் கருத்துச் செல்வம் பெருகி வரும்பொழுது புதிய புதிய சொற் செல்வங்களும் பெருகும் ; வேற்று மெரீழி களின் சொற்கள் தமிழில் வந்து கலக்கும். அவற்றை யெல்லாம் தமிழின் நீர்மைக்கேற்றவாறு செப்பனிட்டு நமதாக்கிக் கொள்ளவேண்டும்; செப்பனிட வேண்டாத இடங்களில் அப்படியே ஏற்றுக்கொள்வதிலும் தவறு ஒன்றும் இல்லை. ஏற்றுக் கொள்வதில் எவ்விதத் தயக்கமும் கூடாது. ہے۔مبہم یہی بہببیہ،ہم தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி என்பது பல அறிஞர்களும் ஒப்புக்கொண்ட மறுக்க முடியாத உண்மையாகும். இன்று தமிழிலுள்ள பிற மொழிச் சொற்களேயெல்லாம் நீக்கிவிட்டாலும் அது தனித்து இயங்கும் ஆற்றல் வாய்ந்த மொழி என்பதை டாக்டர் கால்டுவெல் போன்ற மேட்ைடு அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஒரு மொழி தனித்து இயங்கிளுல் மட்டிலும் போதுமா ? போதாது. அங்ங்ணம் தனித்து இயங்கிலுைம் எல்லாத் துறைகளிலுமுள்ள கருத்துக் களேத் தெளிவாகவும் எளிதாகவும் எடுத்து விளக்க முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எடுத்துக்காட்டாகச் சங்க காலத்திற்கு முன்பிருந்தே வடமொழிச்சொற்கள் தமிழில் கலந்து வந்துள்ளன. அதனுல் தமிழ் மொழி பெற்றுள்ள செல்வந்தான் எவ்வளவு ? சொற் செல்வம் ஒரு புற மிருந்தாலும் கருத்துச் செல்வந்தான் கொஞ்சமா ? இதல்ை தமிழில் சொற்களுக்கும் கருத்துக்களுக்கும் பஞ்சம் உள்ளது