பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 。 காலமும் கவிஞர்களும் மொழி வழங்காத நாகரிக நாடுகளே இல்லை என்றுகூடக் கூறிவிடலாம் ; அவ்வளவு தூரம் இம்மொழி ஆட்சி பெற். றுள்ளது. ஆகவே, உலகில் எந்தப் புதிய உண்மைகள் தோன்றிலுைம் அஃது ஆங்கில மொழியில் உடனே வெளி வந்துவிடும் என்பதற்கு ஐயம் இல்லை. தமிழ் மொழி ஆங்கில மொழியின் உறவைப் பெற்ருல், இப்புதிய கருத் துக்களையும் புதிய உண்மைகளையும் தனது நூல்களில் ஏற்றுக்கொள்ளமுடியும். இம்மாதிரியாக உண்மைகளைப் புதிதாகப் பெறும்பொழுது சொற் செல்வமும் பெருகத் தான் செய்யும். வேறு நாடுகளிலிருந்து கலைச் செல் வமும், அறிவியற் செல்வமும் வந்து சேரும்பொழுது சொற்செல்வமும் வந்து சேர்ந்து வீட்டுக் கருவூலத்தை நிரப்பத்தான் செய்யும். உலகின் பல இடங்களில் பல மொழிகளிலும் தோன் றியுள்ள நூல்கள் யாவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன. அக் கருத்துக்களை யெல்லாம் தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டுமானல், அம்மொழிகளே யெல்லாம் கற்றுக் காலத்தை யெல்லாம் மொழிகளைக் கற் றலிலேயே போக்காது ஆங்கில மொழி ஒன்றைமட்டிலும் கற்று அச்செல்வங்களையெல்லாம் தமிழ்மொழியில் பெயர்த்தும் தழுவியும் எழுதித் தமிழ் மொழியை வளப் படுத்தவும் முடியும். இச்செய்கையால் பல ஆங்கிலச் சொற்கள் தமிழ்மொழியில் வந்து கலக்க நேரிடும். தமிழில் அறிவியல், மருத்துவம், பொறியியல், வானநூல், கணிதம் போன்ற துறைகளில் அதிகமான நூல்களே இல்லை. அத்துறைகளில் தமிழர் அதிகமாக வளரவில்லை. பண்டைத் தமிழர் இத் துறைகளில் பெரும்புகழ் பெற்றிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆளுல், இத் துறைகளைக் கலைகள்