பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 காலமும் கவிஞர்களும் مہمہ۔۔vم۔ مہس۔ سا.۔مہارم MMMSMAMASAMAMAAAA நூல்களே தமிழில் இல்லை. ஆங்கில மொழியிலோ உரை நடைச் செல்வம் ஏராளமாக வளர்ந்துள்ளது. அம்மாதிரி தமிழ் மொழியில் உரைநடை நூல்கள் தோன்ருத வரையில் பாமரத் தமிழ் மக்கள் தக்க கல்வியறிவு பெற முடியாது. இத்துறையில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய உரைநடை நூல்கள் சிலவும் ஆங்கில மொழியின் உறவு ஏற்பட்ட பிறகுதான் தோன்றியுள்ளன. சமயத் தொண்டு புரிவ தற்கு நமது நாட்டிற்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்கள்தாம் இத்துறையில் முதன் முதலாகத் தொண்டாற்றத் தொடங்கினர். இந்த விழுமிய தொண்டினத் தொடங்கி வைத்தவர் வீரமாமுனிவர் என்று வழங்கப்பெறும் ரெவரெண்ட் பெஸ்கி என்ற இத்தாலி நாட்டுப் பாதிரி யாவார். ஆங்கில மொழியின் உறவால் தமிழுக்கு ஏற்பட் டிருக்கும் இரண்டாவது நன்மை புதினம் (Novel) என்ற துறையிலாகும். ஆங்கில மொழியில் சிறந்த புதினங்கள் ஏராளமாகத் தோன்றியுள்ளன. 17-ஆம் நூற்ருண்டு தொடங்கியே இக்கலை மேட்ைடில் அரும்பி வியத்தகு முறையில் வளர்ந்து வருகின்றது. இன்று மேடுைகளில் புதினம் ஒரு சிறந்த கலை என்ற நிலையை யடைந்து விட்டது என்றுகூடக் கூறலாம். தமிழில் இத்துறை இப் போதுதான் தோன்றி வளர்கின்றது என்று சொல்ல வேண்டும். மாயூரம் வேதநாயகம் பிள்ளே அவர்களால் எழுதப்பெற்ற பிரதாப முதலியார் சரித்திரம், பி.ஆர். ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் ஆகியவை தமிழில் முதன் முதலாகத் தோன்றிய புதினங்கள். அவற் றிற்குப் பிறகு தமிழில் எத்தனையோ புதினங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இவை யெல்லாம் ஆங்கில மொழி பயின்ற அறிஞர்கள் தமிழுக்குச் செய்த தொண்டால் ஏற்பட்டவையாகும். ஆங்கில மொழியில்