பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுடன் ஆங்கில உறவு ł 15 தோன்றியுள்ள மாதிரி புதினங்கள் தமிழில் தோன்ருவிட் டாலும், புதினக் கலை வளரவேண்டும் என்ற ஆர்வம் தமிழ் மக்களிடம் நன்ருக ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஐயம் இல்லை. இத்துறையில் தமிழில் அதிக நூல்கள் தோன்றுவதற்குத் தமிழ்த்தாய் ஆங்கிலத்தாயை எதிர் நோக்கி யுள்ளாள் என்று சொல்லுவதில் எவ்வித மறுப்பும் இருத்தல் முடியாது. இதற்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணக்கூடிய மூன்ருவது நன்மை, சிறுகதை வளர்ச்சியிலாகும். ஏதோ கதைகள் என்ற பெயருக்கேற்றவாறு, விக்கிரமாதித்தன் கதை, நளமகாராஜன் கதை என்பனபோன்ற கதைகள் தமிழில் இருந்தனவேயன்றி இன்று மேல்நாட்டு இலக்கிய வகைகளில் ஒன்ருகக் கதைகள் வளர்ந்துள்ள மாதிரி தமிழில் பண்டைக் காலத்தில் இல்லை என்று துணிவாகச் சொல்லிவிடலாம். சிறுகதையில் கதைப்போக்கு சுருக்க மாகத்தான் இருக்கும். கதையில் வரும் மாந்தர்களும் ஒரு சிலராகத்தான் இருப்பர். ஆனல், அவர்களுடைய உணர்ச்சியையும் பாவத்தையும் நுட்பமான நாடகச் சுவையுடன் தோற்றுவிக்கும் சிறு காட்சிகள் அடங்கின சித்திரம்தான் சிறுகதையாக வளர்ந்துள்ளது என்பதை நாம் உணரவேண்டும். படிப்போர் மனத்தில் கதையுடன் ஒருமைப்படக்கூடிய உணர்ச்சியும் எழுந்தால்தான் அஃது உயர்ந்த கதைச் சித்திரமாக வைத்து எண்ணப் படும். இத்தகைய பண்புகளைக் கொண்ட கதைகள் இன்று தமிழில் நாடோறும் ஏராளமாகத் தோன்றிக் கொண்டு வருகின்றன. இத்துறையில் முதன் முதலில் வ. வெ. சு. ஐயர் இட்ட வித்து நன்கு முளேத்து, புது மைப்பித்தன் போன்ற ஆசிரியர்களால் வளர்க்கப்பட்டு, இன்று பல ஆசிரியர்களால் தரம் குறையாது பாதுகாக் கப்பெற்று வருகின்றது. ஆங்கில மொழித் தொடர்பால்