பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 3 காலமும் கவிஞர்களும் தான் தமிழில் சிறுகதை இலக்கியம் தோன்றி வளர்ந்தது. என்று சொல்லுவதில் எவ்வித மறுப்பும் இருத்தல் முடியாது. நான்காவது : இன்று ஆங்கிலத்தில் Literary Criticism என்று வழங்கி வருவதைத் தமிழில் இலக் கியத் திறய்ைவு என்ற தொடரால் குறிக்கலாம். இத் துறை ஆங்கிலத்தில் ஒரு இமயமலைபோல் வளர்ந் துள்ளது. அம்மொழியில் தோன்றும் நூல்களுக்கெல்லாம் திறய்ைவு நூல்களும் தோன்றியுள்ளன. எடுத்துக் காட்டாக செகப்பிரியரின் நூல்களுக்கெல்லாம் திறய்ைவு நூல்கள் பல உள்ளன. அவரது மூல நூல்களின் எண் னிக்கையைவிடத் திறய்ைவு நூல்களின் தொகையே அதிகமுள்ளது என்று கூறப்படுகின்றது. இன்று ஆங்கில மொழியில் ஏராளமான திறய்ைவு நூல்கள் உள்ளன. திற குய்வு எங்ங்னம் செய்யப்பெறல் வேண்டும் என்ப g5ògēš 32 l_ğ*šp(@tij6Y 6ñščš6ir” (Principles of Literary Criticism) என்ற இலக்கண நூல்களும் பல தோன்றி யுள்ளன. இந்த முறையில் பார்த்தால் தமிழ் மொழியில் இன்னும் இத்துறை சரியான தொடக்கம் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இலக்கிய நயங்காணல், பா நயங்காணல் என்ற போக்கில் மட்டிலும் நச்சிர்ைக் கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்களின் உரைகளில் இத்துறையின் மணம் காணப்படுகின்றது என்ருலும், தொல்காப்பியத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமை இயல் ஆகிய பகுதிகள் ஒரளவு இத்துறையைத்தான் குறிக்கின்றன என்று சொன்னுலும், இன்று மேட்ைடு இலக்கியங்களில் ஒரு கலே என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்த மாதிரி தமிழில் திறய்ைவு பண்டைக் காலத்தில் தோன்றவில்லை. இன்று ஆங்கிலக் கல்வி பெற்ற