பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுடன் ஆங்கில உறவு i 17 அறிஞர் சிலரால் சில நூல்கள் தமிழுக்குக் கிடைத்துள் ளன என்ருலும், இத்துறையில் தமிழர்கள் வளர்ச்சி பெற். றனர்கள் என்று சொல்லுவதற்கில்லை. தமிழிலுள்ள ஒவ்வொரு நூலுக்கும் திறய்ைவு நூல்கள் தோன்ற வேண்டும். இதற்கு ஆங்கில மொழியின் உறவு இருந் தால்தான் நல்ல பயன் காணமுடியும். ஐந்தாவது : ஆங்கில மொழியின் உறவால் தமிழ் அடைந்திருக்கும் நன்மை மொழித்துறையிலும் உள்ளது. மொழிகளைக் குடும்பங்களாகப் பிரித்து ஒவ்வொரு குடும் பத்திலுமுள்ள மொழிகளையும், ஒப்பு நோக்கு முறை" என்ற முறையில் ஆராயும் மனப்பான்மை ஆங்கில மொழி அறிவால் விளைந்தது என்றுதான் சொல்லவேண் டும். மேட்ைடிலேயே 18-ஆம் நூற்ருண்டில் பிறந்த இத்துறை சென்ற நூற்ருண்டில் தமிழ் மொழியில் தோன்றிவிட்டது. டாக்டர் கால்டுவெல் என்ற அறிஞர் முப்பத்தேழு ஆண்டுகள் தமிழைக் கற்று, 2ாக்டர் குண்டர்ட் என்பார் மலையாள மொழியில் செய்துள்ள ஆராய்ச்சிகளையும், கிட்டல் என்ற அறிஞர் கன்னட மொழியில் ஆராய்ந்தவைகளையும், சி. பி. பிரெளன் என்ற பெரியார் தெலுங்கு மொழியில் கொண்ட முடிவு களையும் கொண்டு பதினைந்து ஆண்டுகள் இத்துறையில் அல்லும் பகலும் ஓயாது உழைத்து, 'திராவிட மொழி இனம் என்ற ஒரு மொழியினம் இருப்பதை உலகத்திற்கு உணர்த்தினர். அதற்கு முன்னர் இத்துறையில் உழைத்த மாக்ஸ் முல்லர் போன்ற மொழிநூல் வல்லுநர் தமிழ் முதலிய திராவிட மொழிகளே ஆரிய மொழி இனத்தில் வைத்தே எண்ணலாயினர். தமது ஆராய்ச்சி யின் முடிவுகளை யெல்லாம் தொகுத்து டாக்டர் கால்டு வெல் அவர்கள் கி. பி. 1856-ல் 'திராவிட மொழியின் 'ஒப்பிலக்கணம்” என்ற அரியதோர் நூலே வெளியிட்டார்.