பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f : 8 காலமும் கவிஞர்களும் சிறிது திருத்தங்களுடன் அதன் இரண்டாவது பதிப்பை 1875-ல் அவரே வெளியிட்டார். அவருக்குப் பிறகு அத்துறையில் அறிஞர் ஒருவரும் தீவிரமாகக் கவனம் செலுத்தவில்லை. செலுத்தியுள்ள ஒரு சிலரும் ஒரு சில பகுதிகளே மட்டிலும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதி யிருக்கின்றனரேயன்றி முழுநூல் வடிவில் யாருமே வெளி யிடவில்லை. இத்துறையில் ஆரிய மொழிகளைப் பற்றியும், இந்தோ - ஐரோப்பிய மொழிகளைப் பற்றியும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவை யாவும் ஆங்கிலத்தி லும் வெளியாகியுள்ளன. இத்துறையிலும் தமிழன் ஒரு சிறந்த வளர்ச்சியைக் காண வேண்டுமானல் ஆங்கில மொழியின் உறவு இன்றியமையாததாகும். ஆருவது : ஆங்கில மொழியின் உறவு தமிழுக்கு ஏற்பட்ட பிறகே தமிழில் அகராதி நூல்கள் தோன்றின. வீரமாமுனிவர் என்ற இத்தாலியப் பாதிரியார்தான் அகராதியை முதன் முதலாகத் தமிழுக்குத் தந்தா f。 அதற்கு முன்னர் எல்லாம் தமிழர்கள் சொற்களஞ்சி யத்தை நிகண்டுகள் என்ற பெயர்கொண்ட பாவடி வுள்ள நூல்களாகவே தொகுத்து வைத்திருந்தனர். வீரமா முனிவரின் அகராதியை ஒரு சிறந்த அகராதி என்று சொல்ல முடியாவிட்டாலும், அதன் பிறகு வெளிவந்த அகராதி நூல்கள் யாவும் அதனே அடிப்படையாகக் கொண்டே வெளிவந்தன என்று கூறலாம். இன்றுள்ள அகராதி நூல்கள் யாவற்றிலும் சிறந்தது சென்னைப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் லெக்ஸிகன் ஆகும். இன்று ஆங்கில மொழியில் அகராதித்துறை சிறந்த முறையில் வளர்ந்துள்ளது. இலக்கியம், அறிவியல், வானநூல், கணிதம், மருத்துவம், பொறி யியல் முதலிய ஒவ்வொரு துறையிலுமுள்ள கலைச் சொற்களுக்கும் தனித்தனி அகராதிகள் தோன்றி