பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட மொழிநூலின் வரலாறு 1 23, அவரை இந்தியாவிற்கு அனுப்பிற்று. அக்காலத்தில் மரக் கலத்தில் இந்தியாவிற்கு வந்து சேர நான்கு மாதம் செல்லும். இவ்வளவு நீண்ட காலத்தைக் கால்டுவெல் வீணுகக் கழிக்க விரும்பவில்லை. கலைச் சுவை தேடும் கற்ருரைக் காணக் கலமெங்குந் துருவி சி. பி. பிரெளன் என்ற அறிஞரைக் கண்டார். அவர் ஆந்திர நாட்டில் பல்லாண்டு அரசாங்க அலுவல் பார்த்த பெரியார் ; வட மொழியிலும் தெலுங்கு மொழியிலும் அவர் நல்ல அறிவு. பெற்றிருந்தார். அவ்வறிஞரிடம் கால்டுவெல் அவ்விரு. மொழிகளைக் கற்றதுமன்றி நாடோறும் உரையாடித் தென்னுட்டு மக்களைப்பற்றிப் பல விவரங்களையும் அறிந்து கொண்டார். கால்டுவெல் சென்னையில் மூன் ருண்டுகள் தங்கியிருந்தபொழுது தமிழறிவு பெற்றிருந்த துரு (Drew) உவின்சுலோ (Winslow) ஆண்டர்சன் (Anderson) போப், பவர் முதலியோரின் நட்பைப் பெற்ருர் ; இதனுல் இவரது தமிழார்வம் மிகுந்தது. துரு. என்பவரிடம் முறையாகத் தமிழ்ப் பயின்று அம் மொழியில் நல்ல புலமையையும் அடைந்தார். SAASAASAASAASAASAASAASAASAASAA AA ASASASAMeeAAAASASASS கால்டுவெல் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இந்தி யாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஆரிய இனத்தைச் சார்ந்தவையே என்று ஐரோப்பிய மொழி நூலறிஞர் கருதியிருந்தனர். நேப்பாள நாட்டில் நீண்ட காலம் உயர் அலுவலராக இருந்த டாக்டர் ஹாட்சன் (Dr. Hodgson) என்பார் மத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வழங்கி வரும் மொழிகளிலமைந்த சொற்களைத் தொகுத்தும் வகுத்தும் ஆராய்ந்து ஆங்கிலப் பருவ இதழ்களில் வெளியிட்டார். அவற்றை ஊன்றிக் கற்ற மேட்ைடு அறிஞர்கள் ஆரிய இனத்தைச் சேராத மொழிகளும் இந்திய நாட்டில் உள்ளன என்ற உண்மையை அறிந்தனர். பம்பாய் நகரில் பல்லாண்டு: