பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ; காலமும் கவிஞர்களும் AASAASAASAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAAAASA SAAAAS MMMS MAAA AAAA SAAAAA AAAA AAAAS AAAAA SAAAA MAAA AAAA SMAMA SAMMAMAAAS SAASAASAASAASAASAASAASAASAAAS வெளி வந்தது. கால்டுவெல்லின் மருகர் ஜே. எல். வயட் பாதிரியார் (Rev. i. L. Wyat) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தபொழுது இந் நூலே மேலும் திருத்தம் செய்து வெளியிட உதவி புரிந் தார் ; 1913-ஆம் ஆண்டில் இதன் மூன்ரும் பதிப்பு வெளி வந்தது. அதற்குப் பிறகு இந்நூல் வெளி வரவே இல்லை ; இன்று பிரதிகளும் எங்கும் அகப்படவில்லை." திராவிட மொழிகளே ஆராய்வோருக்கு இந்நூல் ஒரு சிறந்த துணையாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. திராவிட மொழிக் குடும்பத்தில் பன்னிரண்டு மொழிகள் உள்ளன என்று கால்டுவெல் விளக்கிப் போந்தார். அவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலேயாளம், துளுவம், குடகு ஆகிய ஆறு மொழிகளும் திருந்தியவை ; நீலகிரியில் வாழும் தோடர் பேசும் துதம் மொழியும், அதே மலையில் உறையும் கோதர்கள் பேசும் கோதம் மொழியும், நடு இந்தியாவில் குன்றுகளி லும் காடுகளிலும் வ்தியும் கோண்டர் பேசும் கோண்டு மொழியும், கோண்டவனத்தின் கிழக்குப் பக்கத்திலும் ஒட்டர நாட்டின் (Orissa) குன்றுகளிலும் வாழும் மக்கள் பேசும் கந்தம் அல்லது கு மொழியும், வங்க நாட்டைச் சார்ந்த இராசமாமலையில் வாழும் மாலர்கள் பேசும் இராஜ்மஹால் மொழியும், சூடிய நாகபுரியிலும், அதைச் சுற்றிலும் வாழும் மக்கள் பேசும் ஓராவோன் மொழியும் திருந்தாத திராவிட மொழிகளாகும். இந்திய நாட்டின் வடமேற்கு எல்லேயிலமைந்த பெலுச்சிஸ்தா னத்தில் வழங்கும் பிராஹீயி மொழியும் திராவிடக் குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தென்னுட்டு மொழி 1 இப்பதிப்பு இன்று சென்னைப் பல்கலைக் கழகத்தின ரால் திரும்பவும் அச்சிடப் பெற்றுள்ளது.