பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 காலமும் கவிஞர்களும் ஒப்பிலக்கணம்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளனர். மூன்ருவது பெரிய குடும்பமாக இலங்கும் கோலாரிய மொழியினத்தை ஆராய்ந்து இன்னும் நூல் ஒன்று வெளி வந்ததாகத் தெரியவில்லை. கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் கிரேக்க மொழி பயிற்றிய பேராசிரியர் இளங் கால்டுவெல்லின் உள்ளத்தில் ஊன்றிய மொழி நூல் வித்து முளைத்தெழுந்து, துரு வார்த்த நன்னிரால் தளிர்த் தோங்கி வளர்ந்து, திராவிடக் கிளைகளில் விரைந்து படர்ந்து, ஒப்பிலக்கணம் என்னும் செழுங்கனி பயப்ப தாயிற்று. ’’’ இக்காலத்து மொழி நூலறிஞர்கள் சித்திய குடும்பத்தனவாகக் கருதப்படும் துருக்கியம், மங்கோ லியம், துங்கேசியம், ஃபினியம் முதலிய மொழிகளின் இலக்கண அமைதிகள் நன்ருக ஆராயப்படும் அளவும், அவற்றின் மொழித்திறன் குறித்து முடிந்த முடிபாக ஒன்றுங் கூறுவதற்கில்லை என்று கருதுகின்றனர். டாக்டர் கிரியர்சன் என்பார் திராவிட மொழிகளை உலகிலுள்ள எவ்வகை மொழிகளோடும் இணைப்ப்தற்கு ஒப்பவில்லை. கிட்டத்தட்ட 600 பக்கங்கள் கொண்ட கால்டு வெல்லின் ஒப்பிலக்கண நூல் பல மொழி நூலறிஞர் களின் கண்களைத் திறந்தது. திராவிட மொழிகளில் சிறப்பாகத் தமிழ் மொழியின் தொன்மை, திராவிட மக்களின் சிறப்பு போன்ற உண்மைகள் அறிஞர் உலகத் திற்குப் பரவின. பிறநாட்டு நல்லறிஞர்கள் தமிழின் சிறப்பை உள்ளவாறு உணர்ந்தனர். அரியதோர் ஆராய்ச்சி நூலே வெளியிட்ட கால்டுவெல்லேப் பாராட்டி கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தார் டாக்டர் (L.L. D. என்ற பட்டத்தையும் வழங்கினர். 2 ரா. பி. சேதுப்பிள்ளை. கால்டுவெல் அய்யர் சரித்திரம் பக்கம் 49.