பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட மொழிநூலின் வரலாறு t 33 AMMeiAieA AMMAAA AAAA AAAA AAAAiAMSMABBAMSMMAMMAeMMMAeAMMAAMMeeA AM AeS SeSeeSeSeeS கட்டுரைகள் அடிக்கடி செந்தமிழ்ச் செல்வி'யிலும், "தமிழ்ப் பொழிலிலும் வெளிவருகின்றன. இங்ங்னம் பல அறிஞர்கள் பல பகுதிகளைப் பற்றி ஒரு சில கட்டு ரைகள் எழுதி வருகின்ருர்களேயன்றி ஒருவராவது மொழி நூல் முழுவதையும் பற்றி எழுதத் துணியாதது தமிழ் மக்களின் தீப்பேறு என்றுதான் எண்ண வேண்டும். திருவாளர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கூறி யிருப்பது இவ்விடத்தில் கருதத் தக்கது. அவர்கள் கூறுவதாவது: “மிகவும் நன்ருகத் தொடங்கி கால்டுவல் செய்துவந்த மொழியாராய்ச்சிப் பணியை அவரைப் பின்பற்றி ஒருவரும் தொடர்ந்து செய்யாமை பெரிதும் வருந்தத் தக்கது. இப்பொழுதாவது தக்க அறிஞர் யாவ ரேனும் அப்பணியைச் செய்ய முற்படுதல் வேண்டும். கி. பி. 1875-ஆம் ஆண்டில் கால்டுவெல் அவர்களின் ஒப்பு நோக்கு இலக்கணத்தின் இரண்டாம் பதிப்பு வெளியிடப் பெற்றது. அக் காலத்திற்குப் பின், இமீாழி யாராய்ச்சி செய்யும் முறை பலபடியாகத் திருத்தம் பெற் றுள்ளது. தமிழில் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலிய முக்கியமான நூல்கள் நன்ருகப் பதிப்பிக்கப் பெற்று வெளிவந்துள்ளன. கல் வெட்டுச் சாசனங்கள் நூற்றுக்கணக்காக வெளிவந்துள்ளன. நாட்டு வர லாற்று உணர்ச்சியும் மிகவும் பெருகியிருக்கின்றது. அறி ஞர்கள் பல துறைகளிலும் ஆராய்ச்சி செய்து நம் அறிவைப் பெருக்கியிருக்கின்ருர்கள். பிற திராவிட மொழிகளிலும் இங்ங்னமே அறிவு பெருகி வளர்ந்திருக் கின்றது. இவ்வாறு பெருகியுள்ள அறிவைப் ஒப்பு நோக்கு இலக்கணங்களுடன் பயன்படுத்தவேண்டுவது மிகவும் அவசியம். இவற்றை நோக்குமிடத்து கால்டு வெல் அவர்களது நூலே நான்கு புதுக்கி எழுதுதல் எத் துணே அவசியம் என்பது புலப்படும். உண்மையில், இங்ங்ணம் புதுக்கிய நூல் வெகு காலத்திற்கு முன்னரே