பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 34 காலமும் கவிஞர்களும் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும்.”* திரு. பிள்ளே அவர்கள் மொழிநூல் நிலையினை எடுத்துக் கூறிய தோடன்றி ஆராய்ச்சி செய்வோருக்கு வழியையும் வகுத்துத் தந்திருப்பதை நாம் அவசியம் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். ஆகவே, தமிழுக்குப் புதிதாகவுள்ள மொழிநூல் துறையில் தொண்டாற்றுவது தமிழ் மொழிக்குச் செய் யும் விழுமிய தொண்டாகும். ‘' யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவ தெங்கும் காணுேம்’ ’ என்ற முழக்கத்துடன் நின்றுவிடாது, பிறர் நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் . தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்." என்ற பாரதியின் கனவை நனவாக்கில்ைதான் பண்டைச் சிறப்புக்களுடன் விளங்கும் தமிழ் மொழி இன்றைச் சிறப்புக்களையும் பெற்று உலக மொழிகளில் சிறந்தனவற்றுள் ஒன்ருகக் கருதப்படும் நிலையையும் பெற்று விளங்கும் என்பதற்கையமில்லை. 4. எஸ். வையாபுரிப் பிள்ளை. திராவிட மொழிகளில் ஆராய்ச்சி’’-பக்கம் 33. 5. பாரதியார் கவிதைகள்-தமிழ் 1. 6. பாரதியார் கவிதைகள்-தமிழ் 2.