பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சோழர்கால வாணிகம் SAM eSeSHSHMMMS HASA SSASAS A SAS AA SAASAASSAAAAAAeMeeAeAMAMAMAAAA சிற்றேறக்குறைய நானூறு ஆண்டுகள் விசாயலய வம்சாவழிச் சோழர்கள் ஆண்ட காலத்தில் நாட்டில் வாணிகம் எவ்வாறு இருந்தது ? பொருளாதார உலகையே இன்று வணிகர்கள் கைப்பற்றிக் கொண்டி ருப்பதுபோல அன்றைய நிலை இருந்ததா ? அரசாங்கத் துக்கும் வாணிகத் துறைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருந்தது? பொருள்களை உற்பத்தி செய்தல், அவைகளே விற்றல், வாங்கல் ஆகிய செயல்களில் அரசாங்கம் எவ்வளவு தூரம் தலையிட்டது? இவற்றை இங்கு ஆராய்வோம்.

  • வாழ்க்கையின் திறய்ைவே இலக்கியம்’ என்று பேரறிஞர்கள் கூறியிருத்தலால் இலக்கியங்களிலிருந்தும் வாழ்க்கைத் துறையாகிய வாணிகத்தைப் பற்றி ஒரளவு தெரிந்துகொள்ள முடியும். சங்ககாலச் சோழர்களைப் போலவே, பிற்காலச் சோழர்களும் இலக்கியத்திற்கும் கலைக்கும் ஆக்கம் கொடுத்தனர். சோழர் காலத்தில் தோன்றிய சீவக சிந்தாமணி, கலிங்கத்துப் பரணி, கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூல்களிலிருந்து வாணிகத்தைப்பற்றி ஒன்றும் அதிகம் தெரிந்து கொள் வதற்கில்லை ; சங்க காலத்தில் தோன்றிய பட்டினப்பாலே சங்கமருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள்போல் பிற்காலச் சோழர்கள் காலத்தில் பிறந்த நூல்கள் நமது தமிழகத்தில் நிலவிய வாணிக நலத்தை எடுத்தோதும் சிறப்புக்களைப் பெறவில்லை. ஏதோ அத்தி