பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 5 காலமும் கவிஞர்களும் பூத்தாற் போல சிந்தாமணி யவனப் பேழையையும்: யவனர் கைவினைச் செப்பையும் குறிப்பதிலிருந்து அக்காலத்தில் யவனருடன் வாணிகம் நடைபெற்றதை ஒருவாறு அறிய முடிகின்றது. ஆல்ை, இன்று வாணிகத் தைப் பற்றிக் குறிப்பிடும் செய்திகள் யாவும் கல்வெட்டுக்கள் மூலம் அறிந்தவையே யாகும். சோழர்கள் காலத்தில் ஆட்சி முறை மிகத் திறம்பட அமைந்திருந்ததால் நாட்டில் குழப்பமே இல்ல்ாமல் இருந்தது. ஏதோ ஒரு சில சந்தர்ப்பங்களில் குறுநில மன்னர்கள் விளேத்த கலகங்களே அடக்குவதற்குச் சில படையெடுப்புக்கள் இருந்தன என்ருலும், ஆட்சி மிக அமைதியுடன் நடைபெற்று வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். நாடு அமைதியாக இருந்தால்தான் கைத்தொழில்கள் பெருகி பொருளின் உற்பத்தி அதிக மாகும். உள்நாட்டுப் பயணத்தில் பயம் இல்லாமல் இருந்தால்தான் உள்நாட்டுச் சந்தைகளுக்கு நாட்டின் பல பிாகங்களிலிருந்து பொருள்கள் வந்து குவியும். தனிப்பட்ட வணிகர்களும் வணிகர் சங்கங்களும் வெகு மும்மரமாக வாணிகம் செய்து வந்தனர். சோழ நாட்டுக்குட்பட்ட பல பகுதிகளில் உள் நாட்டு வாணி கம் மிக நன்ருக நடைபெற்று வந்தது. நாட்டின் பல பகுதிகட்கும் வணிகர்கள் சென்றனர் என்பதைக் கல் வெட்டுக்களால் அறிகின்ருேம். எடுத்துக் காட்டாக, இக்காலத்தில் மலேயாளம் என்று குறிக்கப்பெறும் மலே நாடு என்ற பகுதியிலுள்ள வணிகன் ஒருவன் செங்கற் 1. பொன்சொரி கதவு தாளிற் றிறந்து பொன் யவனப் பேழை (செய். 113.) அருமணி வயிரம் வேந்த அருங்கலப் பேழை ஐந்நூற்(று) எரிமணி செம்பொன் ஆர்ந்த விராயிரம் யவ்னப் பேழ்ை . (செய், 557) 2. மணியியல் யவனச் செப்பின் மங்கலத் துகிலே வாங்கி (செய். 1146)