பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 காலமும் கவிஞர்களும் SAASASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAMS MAMMMAMSMAMMMAMMS MMMMMAMM சேமித்து வைக்கும் பழக்கத்தை விடவில்லை என்பதை நாம் அறியாமல் இல்லை. கோயிலுக்குரிய செல்வம் நகைகளின் வடிவில் இருப்பதை இன்றும் நாம் காண் கின்ருேம், உப்பு எடுக்கும் தொழில் அரசாங்கத்தின் பார்வை யில், அவர்களின் ஆகணக்குட்பட்டே, நடைபெற்று வந்ததாகத் தெரிகின்றது. கடற்கரையை யொட்டியுள்ள மரக்காணம், கன்னியாகுமரி, வாரியூர், ஆய்துறை ஆகிய இடங்களில் உப்பளங்கள் அமைக்கப்பெற்று. உப்பு உற்பத்தி நடைபெற்று வந்ததாகக் கல்வெட்டுக்களால் அறிகின்ருேம். பாப்டாவாவிலிருந்த சில உப்பளங்களே கி. பி. 11 12-இல் கடல் ஆக்கிரமித்துவிட்டதாகக் கல் வெட்டுக் குறிப்பு ஒன்று காணப்படுகின்றது. சிலு கைத்தொழில்கள் நீதி மன்றத்தின் பார்வை யிலோ அல்லது கோயிலின் அங்கீகாரத்தின் கீழோ நடைபெற்று வந்தன. எடுத்துக்காட்டாக ஒன்றைக் காண்போம். பட்டசாலியர் எனப்படும் நெசவாளர்கள் காஞ்சியில் நான்கு பாடிகளில் (வார்டுகளில்) வசித்து வந்தனர். அவர்கள் அரசர்க்குரிய ஆடைகளை நெசவு செய்யும் சிறப்பான பணியைப் பெற்றிருந்தனர். உத்தமச் சோழன் அவர்களைக் காஞ்சியிலுள்ள ஊரகம்’ என்ற கோயிலின் பொருளாதார சம்பந்தப்பட்ட செயல் களைக் கவனித்து வருமாறு நியமனம் செய்திருந் தான். சோழர்-நியமம்' என்ற ஊரிலுள்ள ஏழை மக்களுக்கு எல்லா அரசாங்கப் பாக்கிகளும் தள்ளுபடி செய்யப்பெற்றன. அதற்குப் பதிலாக அவர்கள் கோயிலுக்குரிய கணக்குகளைச் சரியாக எழுதிக் கோயில் அலுவல்களைக் கண்காணித்து வந்த நெசவாளர்களிடம் சரிபார்ப்பதற்காகத் திங்கள்தோறும் ஒப்புவிக்கும்