பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

காலமும் கவிஞர்களும்.


சமய நூல்களைப் பயின்று அவற்றைப்போலச் சிறு நூல்களையும் இலக்கியங்களையும் இயற்றுவாராயினர். சிந்தாமணி, யசோதர காவியம், மேருமந்தர புராணம் போன்ற நூல்கள் யாவும் சமண சமயக் கருத்துக்களைக் கதை வடிவில் விளக்குபவை. அன்றியும், அவர்கள் இலக்கியச் சுவை ததும்பும் பல்வேறு சிற்றிலக்கியங் ககாயும் இயற்றினர். எனவே, தமிழில் பெருங் காப்பியங்கள் எழுவதற்கு ஏற்ற சூழ்நிலை அவற்றால் உருவாயிற்று என்று கருதுதல் பொருத்தமாகும். இக்காலத்தில் வாழ்ந்தவன் தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவன் இச்சூழ்நிலையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தமிழர்கள் மனங்கவர்ந்திருந்த இராமன் கதையைச் சிறந்த காவியமாகப் புனைந்தான். செய்யுள் இலக்கணங்களும், அணியிலக்கணங்களும் - துணை செய்ய, கேட்போரை இன்புறுத்தவல்ல சிற்றிலக்கிய வகைகள் வழிகாட்ட, சமய நூல்களும் மெய்ப்பொருளியல் நூல்களும் இலக்கியங்களில் வரும் கருத்துக்களை ஆழமுடையனவாகவும் உரமுடையனவாகவும் செய்ய உதவ, இத்தனைக்கும் மகுடமாகத் தன்னையே முற்றும் ஆண்டவனுக்கு ஆட்படுத்துவதான பக்தி நெறி துலங்க, கம்பன் தன் காவிய மாளிகையைச் சமைத்து அழியாப் புகழ் பெற்றான். அக்காவியம். இன்று நம்மிடையே தமிழ்க் கவிதைத் துறைக்கு ஒரு கட்டளைக் கல்லாய், காவியங்களுள் தலைசிறந்ததாய்ச் சிறப்புற்று விளங்குகின்றது.

பொது வாழ்வில் நிலவும் கருத்துக்களை, ஆட்சி செய்ய இயலாது போயினும், இலக்கியங்களுக்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கும் ஆற்றல் பெற இயலாவிடினும், இலக்கிய ஆசிரியனிடம் திறனாயும் திறன் அவன் விருப்பப்படி இயக்கவல்லதாகவுள்ளது. இத்திறனாயும் திறனைக் கொண்டுதான் இலக்கிய ஆசிரியன்