பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்கால வாணிகம் 重4薰 சோழநாட்டிற்கும் கிழக்கேயுள்ள நாடுகளுக்கும் நல் லுறவு ஏற்பட்டிருந்தது என்ற செய்தியை அரண் செய் கின்றது. சுருக்கமாகக் கூறினல், சோழ நாடு மேற்கே இலட்சத் தீவுகள், அரேபியா, பாரசீகம் ஆகிய நாடுக ளுடனும் தெற்கே இலங்கை, மாளயத் தீவுகள் ஆகிய வற்றுடனும், கிழக்கே பர்மா, ஜாவா, சுமத்தாா, சீன முதலிய நாடுகளுடனும் கடல் வாணிகம் செய்து வந்தது என்று சொல்ல வேண்டும். AMAAA AAAA AAAA AAAA AA AAAA AAAAS AAAAA AAAA SAAAAAS AAASASAAAMMMAMA SHHSAAAAAA AAAA AAAAMMAAASAAAAS AAASASASS இம்மாதிரி தொலைவிலுள்ள நாடுகளுடன் வாணிகம் நடைபெற்றபொழுது எவ்வித சரக்குகள் புழக்கத்தி லிருந்தன என்பதை யோசித்துப் பார்க்கத்தான் வேண்டும். அளவில் குறைவாகவும் விலையில் உயர் வாகவும் உள்ள சரக்குகள்தாம் இங்கிருந்து போயிருக்க வேண்டும் ; அதேமாதிரியான சரக்குகள் அங்கிருந்து வந்திருக்கவும் வேண்டும். அராபி நாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவர் இந்தியாவிலிருந்து ஆம்பர், கற்பூரம், உயர்ந்த இரத்தினக் கற்கள், பலவித வாசனைப் பொருள்கள், மூங்கில், யானைத் தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக் கட்டை மருந்துச் சரக்குகள், தாளித சாமான்கள் முதலியவற்றைத் தம் நாடு கொண்டதாகக் குறிப்பிடுகின்ருர். நகர்ப்புறங்களில் உயர்ந்த கைகுட் டைகள், லினன் திரைகள், முத்துக்கள் முதலிய வற்றிற்கு அதிக கிராக்கி இருந்தது இன்குெரு வரலாற்று ஆசிரியர் இந்தியாவிலிருந்து விலே உயர்ந்த பருத்தி ஆடைகள், நகைகள், காண்டாமிருகக் கொம் புகள், ஆம்பர், முத்து, பவளம், வாசனைத் திரவியங்கள் முதலியவை சீனுவில் இறக்குமதியாயின என்று குறிப் பிடுகின்ருர். விலை மிகுதியின் காரணமாகவும் சீன அரசாங்கம் இவ்வாணிகத்தைத் தானே நடத்தும் பொறுப்பை மேற்கொண்டது. அனுமதி பெற்ற ஒரு சில வணிகர்கள் மட்டிலுந்தான் இச் சரக்குகளை