பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்கால வாணிகம் 143 SMMS MMAAA AAASA SAA AAAA AAAA AAAAS AAASASAAABMM MAMAMMMMM படுகின்றது. பர்மாவிலுள்ள பெகுவுடனும் இவ்வியா பாரம் நடந்ததாகத் தெரியவருகின்றது. பெரும்பாலும் இக் குதிரைச் செட்டிகள்” மலே நாட்டிலிருந்து குறிக்கப் படுவதால், தென்னிந்தியாவுக்குத் தேவ்ையாக இருந்த குதிரைகளில் பெரும் பகுதி அராபி நாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டது என்று ஊகித்து முடிவு கட்டுவதில் தவறு ஒன்றும் இல்லை. மார்க்கோபோலோ, வாசாப் என்ற அறிஞர்கள் பதின்ைகாம் நூற்ருண்டில் இக்குதிரை வாணிகம் சிறப்பாக இருந்தது என்று சொல்லுவதிலிருந்து நாம் அறியும் உண்மை ஒன்று உண்டு. திடீரென்று அவ்வாணிகம் வளர்ந்திருக்க முடியாது. மிக முன்னதாகக் கொள்ளாவிட்டாலும், சோழர்கள் காலத்தில் இவ்வாணிகம் தொடங்கிற்று என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லே. தனிப்பட்ட வணிகர்களேத் தவிர பல வணிகர்கள் சேர்ந்து சங்கங்கள் அமைத்துக்கொண்டு வாணிகம் செய்து வந்த செய்திகளேயும் கல்வெட்டுக்களால் அறிகின்ருேம். கல்வெட்டுக்கள் இரண்டுவகையான சங்கங்களைக் குறிப்பிடுகின்றன. உள்நாட்டில் வாணிகம் செய்து வந்த நகரம் என்று சொல்லப்படும் சங்கங்கள் ஒருவகை. இவை மாமல்லபுரம், காஞ்சிபுரம் போன்ற பெரிய நகரங்களில் இருந்தன. மற்ருெரு வகை வெளி நாடுகளில் வாணிகம் செய்துவந்த ‘மணிக்கிராமம்’, 'வலஞ்சியர்' என்பவை. இந்த இரண்டு வகை சங்கங் களுக்கும் உள்ள சம்பந்தங்களைப் பற்றித் திட்டமாக ஒன்றும் அறிந்துகொள்ள இயலவில்லை. கொடும்பாளுர் என்ற இடத்தில் மணிக் கிராமம் என்ற சங்கமும், திருப்புறம்பியத்தில் வலஞ்சியர்' என்ற சங்கமும் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் குறிப்பிடு கின்றன. சத்திய வாசகர்கள்', 'தன்ம வாஞ்சியர் என்ற வணிகக் கூட்டத்தார் திருவண்ணுமலையில் ஆண்டு