பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்கால வாணிகம் #45 SAAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAASA SAAAAS AA SAASAASAASAASAAMAMS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSASAMMAMAAA AAAASASASS به سبب திருத்துவதற்கு மானியம் விட்ட செய்தியையும் குறிக் கின்றது. அக்குளமும் அவ்வணிகச் சங்கத்தின் பெயரா லேயே வழங்கி வருகின்றது. சுமத்ராதீவில் லோபாடோவா என்ற இடத்திலுள்ள தமிழ்க் கல்வெட்டு ஒன்ருல் இச்சங்கத்தைப் பற்றிய குறிப்பு காணப்பெறுவதால், அலைகடலுக்கப்பாலும் இச் சங்கம் வாணிகம் செய்து வந்தமை தெரிகின்றது. மைசூர் மாநிலத்திலுள்ள சில கல்வெட்டுக்கள் இச்சங்கங்கள் தோன்றிய கதையைப் புராணச் செய்திகள் போலக் குறிப்பிடுகின்றன. அன்றியும், அவை அவர்கள் எடுத் துச் சென்ற விற்பனைச் சரக்குகளேயும் தாம் சென்ற ஊர் களேயும் நாடுகளேயும் சரக்குகளே எடுத்துச் செல்லக் கையாண்ட சாதனங்களையும் குறிப்பிடுகின்றன. சேர நாடு, சோழநாடு பாண்டி நாடு, மலேய நாடு, மகத நாடு, கோசல நாடு, செளராஷ்டிர நாடு, கும்ப நாடு, காம்போஜ நாடு, நேபாள நாடு ஆகிய நாடுகளுக்கெல் லாம் சென்ற அவ்வணிகர்கள் பகவதி'யைத் தெய்வ மாகக் கொண்டிருந்தனர். தரை வழியாகவும் கடல் வழியாகவும் அவர்கள் எல்லாக் கண்டங்களுக்கும் சென்றனர். அவர்களிடம் மொத்த வியாபாரமும் இருந்தது. தனிப்பட்டவர் சரக்குகளேத் தலையில் சுமந்து சென்று சில்லறை வியாபாரம் செய்த வழக்கமும் இருந்தது. சிலர் தம் சரக்குகளேக் கழுதைகளின்மீதும், எருமைக்கடாக்களின் மீதும் கொண்டு சென்றனர். அவர்கள் ஐந்நூறு வீர சாசனங்களே ஏற்படுத்தியிருக் கின்றனர். அந்தணர்களும் வலஞ்சியர்களுடன் சேர்ந்து தென்னுர்க்காட்டு மாவட்டத்திலுள்ள எண்ணுயிரம் என்ற ஊரின் தெற்குக் கடைத் தெருவில் வாணிகம் செய்தனர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது. சில குறிப்பிட்ட செயல்கட்குத் தேவையுள்ள பொழுது 37–1 l