பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 48 காலமும் கவிஞர்களும் ASA SSASAS SSAS SSAS SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS - நகரங்கள் தம் உறுப்பினரிடையே காணிக்கைகளை தண்டல் செய்யும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தன. கி. பி. 1087-ஆம் ஆண்டில் வாலையூர் என்ற ஊரி லிருந்து நகரம் அவ்வூர்க் கோவிலில் விளக்குகள் எரியும் திருப்பணிக்காகத் தமது வாணிகத்தில் சில முறைகளைக் கையாண்டது. தானியங்களே விற்போரும் வாங்குவோரும் ஒரு காலத்தில் ஒரு நாழியில் தால் அளவு பாட்டம் தானியம் கொடுத்தனர் ; நிறையொன் றுக்கு ஒரு பலத்தில் கோல் கூலியும், 1000 பாக்கிற்கு 10 பாக்கும் கொடுத்து வந்தனர். இம்மாதிரி பல சான்றுகள் உள. "நாணு தேசிகள் ஏற்படுத்திய வணிக சங்கங்களே பேராற்றல் வாய்ந்தவையாக இயங்கின ; அவற்றின் நடவடிக்கைகளில் எந்த அரசாங்கமும் தலையிடுவ தில்லை, எல்லா நாடுகளிலும் அவைகட்கு நல்ல மரியாதை இருந்து வந்தது. சோழ நாட்டிலும் மத்திய அரசாங்கமும் சரி, உள்ளுர் அவைகளும் சரி, அவற் றிற்குச் சிறப்பு அளித்தன. அச்சங்கங்கள் தம் சரக் கறைகளைக் காக்கவும் சரக்குகளேக்கொண்டு பயணம் செய்யும்பொழுது பாதுகாவலாக இருக்கவும் சம்பளம் கொடுத்து வீரர்களடங்கிய சிறு சேனையை வைத்திருந் தன. எங்கெங்கு சென்று தங்கினர்களோ அங்கங் கெல்லாம் அந்நாட்டு உள்நாட்டு விவகாரங்களில் அக்கறைகொண்டு இருந்தனர். சான்ருக ஒன்றைக் குறிப்பிடலாம். மேலுனர்ப் பட்டணத்திலிருந்தபொழுது அவ்வூரிலுள்ள நீ வைணவர்களுடன் ஒத்து உழைத்து சோழமா தேவி சதுர்வேதி மங்கலம் என்ற வாண்டுர் அவையிடம் வழக்கமாக வாங்கப்பட்டு வந்த காணிக்கை யைத் தண்டல் செய்தனர். அவர்கள் சென்ற நாடுகளில் நேரிடும் போர்களும் அமைதியும் அவர்கள் வாணிகத் தைச் சிறிதும் பாதிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.