பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. புத்தர் காட்டிய நெறி சமயங்கள் யாவும் வாழ்வின் அடிப்படையில் அமைந்தவை; உணர்வை நிலைக்களகைக் கொண்டவை. சமயப் பெரியார்கள் யாவரும் தாம் வாழ்க்கையில் கண்ட அநுபவங்களேயே சமய உண்மைகளாகக் கூறி யுள்ளனர்; தாம் துணுகி உணர்ந்தவற்றையே வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய நெறிகளாக உணர்த்திச் சென்றுள்ளனர். சமய வாழ்க்கை வேறு, உலக வாழ்க்கை வேறு என்ற எண்ணம் அவர்களிடத்தில் இல்லை. பிற்காலத்தில் வந்த சமயப் பிரசாரகர்களும் பொது மக்களும் அந்நெறிகளைத் தவருக உணர்ந்து கொண்டதால் சமய வாழ்க்கை வேறு உலக வாழ்க்கை வேறு என்ற தவருன கருத்து தோன்றிவிட்டது; வெறும் சொல்லாடலுக்கும் வேடத்துக்கும் சமயம் இரையாகி விட்டது. இதல்ைதான் எல்லாச் சமயங்களிலுமே வாழ்க்கைக்கு ஒவ்வாத கருத்துக்கள் இருக்கின்றன. ஒருசில கருத்துக்களுக்கும் திரித்துப் பொருள் உரைக்கப் பெறுகின்றன. வந்தனைகளையும் வழிபாடுகளையும் வெறும் சடங்குகளாகக் கொண்டால்மட்டிலும் பயனில்லை; அவை வாழ்வோடு ஒட்டி அமைதல் வேண்டும். சில சமயங்கள் செல்வாக்கின்றிப் போனதற்கு அவை வாழ் வுடன் மேற்கொள்ளப்பெருமையே காரணம் என்று கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. பெளத்த சமயம்: . பெளத்த சமயம் பாரதநாட்டுப் பழைய சமயங்களுள் ஒன்று. இற்றைக்குச் சரியாக 2500 ஆண்டுகட்கு முன்னர் இமயமலையின் அடிவாரத்திலுள்ள நேபாள