பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் காட்டிய நெறி 149 நாட்டில் கபிலவாஸ்து என்ற நகரில் சாக்கிய குலத் திலே கெளதம குடும்பத்தைச் சேர்ந்த சுத்தோதனர் என்ற அரசருக்கும் அவரது மனைவியுாகிய மாயா தேவிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்குப் பெற்ருேர் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டினர். அக்குழந்தைதான் இன்று உலகம் எல்லாம் பாராட்டும் புத்தர் பெருமானுக விளங்கியது. இளமை யிலேயே இவ்வுலக வாழ்க்கை நீர்மேல்குமிழி போலவும் புல் நுனிமேல் நீர்போலவும் நிலையற்ற தென்று உணர்ந் தார் சித்தார்த்தர். தமக்குரிய அரச பதவியையும் பெருஞ் செல்வத்தையும், பெற்று வளர்த்த பெற்ருேரை யும், அழகிய மனைவியையும் அருமைக் குழந்தையையும் விட்டுத் துறவியானர். இன்று வடநாட்டில் கயைக்கு” அருகில் ஐந்து கல் தொலைவிலுள்ள புத்த கயை’ என வழங்கும் ஒர் இடத்தில் ஆற்றங் கரையிலுள்ள அரச மரத்தின் கீழ் அமர்ந்து தவம்புரிந்து உண்மையறிவை அடைந்தார். அவர் இவ்வாறு பெற்ற அறிவை மக்களுக்குப் போதித்தார். அவர் காட்டிய நெறிதான் புத்தசமயம் என்று பெயர் பெற்று விளங்குகின்றது. திரிபிடகம்: புத்தர் பெருமான் வாழ்ந்த காலத்தில் வட இந்தியா வில்பெருகிப் பயின்ற மொழி பாலி மொழியாகும். மக்க ளறிந்த அம்மொழியில் புத்தர் பெருமான் தம் கருத்துக் களே வெளியிட்டார். கிட்டத்தட்ட நாற்பத்தொன்பது ஆண்டுகள் தமது கொள்கைகளே அவர் நாடெங்கும் பரப்பிவந்தார். ஆனல், அவற்றை அவர் நூல்வடிவ மாக எழுதி வைக்கவில்லை. அவருடைய சீடர்கள் அவர் போதித்த கருத்துக்களே இரண்டு தொகுப்புக் களாகத் தொகுத்து வைத்தனர். புத்தர் பெருமான் நிர்வாண மோட்சம் அடைந்த சில மாதங்களுக்குப் பிறகு மகதநாட்டுத் தலைநகரான இராஜகிருஹ நகருக்கு