பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் காட்டிய நெறி i 5 t ஆராய்ந்தனர். கண்டிக்கப்பெற்ற 10,000 பிட் சுக்கள் தனிப்பிரிவாக பிரிந்துபோய் விட்டனர் என்று தீபவம்சம் என்ற நூலால் அறியக்கிடக்கின்றது. புத்தரது ஆதி கொள்கைகளேப் பின்பற்றிவரும் புத்தமதத்தைத் தேரவாத பெளத்தம் என்றும், புத்தர் காலத்தில் இல்லாத புதிய கொள்கைகளேக் கொண்ட மதத்தை மகாயான பெளத்தம் என்றும் வழங்குவர். தேரவாத பெளத்தமே பிற்காலத்தில் ஹீனயான பெளத்தம் என்று பெயர் பெற்றது. ஹீனயானம் பர்மா நாட்டிலும் இலங்கைத் தீவிலும் பரவியுள்ளது; மகாயானம் நேபாளம், திபேத், சீனம், சப்பான் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது. தேரவாத பெளத்த நூல்கள் யாவும் பாலி மொழியில் எழுதப்பெற்றவை ; மகாயான பெளத்த நூல்கள் வட மொழியில் எழுதப்பெற்றவை. மணிமேகலையில் கூறப் பெறும் பெளத்த சமயக் கருத்துக்கள் யாவும் தேரவாத பெளத்தத்தைப் பற்றியவையாகும். இவற்றைச் சாத்தனர் திரிபிடகத்திலிருந்து மிக அழகாகச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார். பன்னிரு கிதானங்கள் : பெளத்த சமயம் பன்னிரண்டு நிதானங்களை யுடையது. நிதானம் என்பது, காரணம். இவை பாலி மொழியில் அவிஜ்ஜை, ஸங்த்காரம், விஞ்ஞானம், நாம ரூபம், ஷனாயதனு, பஸ்ஸ்வேதஞ, தண்ஹா, உபா தானம், பவம், ஜாதி, ஜராமாணம் என்று வழங்குகின் றன. இவை தமிழில் முறையே பேதைமை, செய்கை, உணர்வு, அருவுருவாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்று வழங்கு கின்றன. " பேதமை செய்கை உணர்வே அருவுரு வாயில் உள்ளே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்