பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலமும் கவிஞர்களும் 霊 53 இற்றென வகுத்த இயல்பீ ராறும் பிறந்தோர் அறியில் பெறும்பேறு அறிகுவர் அறியார் ஆயின் ஆழ்நர கறிகுவர்' என்று சாத்தளுர் கூறுகின்ருர். இந்தப் பன்னிரு சார்பு களின் தன்மைகளைத் தம் மணிமேகலையில் 30-ஆம் காதையில் மிகத்தெளிவாக விளக்குகின்ருர் சாத்தனர். இச்சார்புகளிளுல்தான் பிறப்பு இறப்பு உண்டாகின்றன. சார்புகளைச் சிறிது சிறிதாகக் களைந்தால்தான் நிர்வர்ண மோட்சம் எனப்படும் வீடு பேற்றினே எய்தலாம்.

  • சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார் தரும் நோய் ’’’ என்ற பொய்யா மொழியாரின் கருத்தும் இதுவேயாகும். நான்கு உண்மைகள் : நிர்வாண மோட்சம் அடைவதற்கு நான்கு உயர்ந்த உண்மைகளை அறியவேண்டும். அவை துக்கம், துக் கோற்பத்தி, துக்கநிவாரணம், துக்கநிவாரணமார்க்கம் என்பன. புத்தர் பெருமான் போதி மரத்தினடியில் மெய்ஞ்ஞானம் பெற்ற பொழுது இவற்றை அறிந்தார். இந்த நான்கின் அடிப்படையில்தான் புத்தர் பெருமான் எழுப்பிய சமயக் கருத்துக்களாகிய கட்டடங்கள் யாவும் நின்றன. துக்கம்: துக்கம் என்பது நோய். பிறப்பு துன்பம்; பிணி துன் பம், மூப்பு துன்பம்; இறப்பு துன்பம்; அன்பில்லாரோடு தொடர்பு துன்பம்; அன்புள்ளாரிடத்தினின்றும் பிரிவு துன்பம்; விரும்பியதைப் பெருமை துன்பம்; சுருங்கக் கூறின், புலன்களால் உண்டாகும் பற்றுக்கள் யாவும் 1 மணிமேகலை-24, 105.110 ; 30: 45.50, 2 குறள்-359.