பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

費5号 காலமும் கவிஞர்களும் ASAMSAMMAAA AAAA AAASS திருடாமை, வியபிசரியாமை, பொய்யாமை, கள்ளுண் ணுமை என்னும் இவை பஞ்சசீலமாகும்; இஃது இல்லறத் தார் எல்லோருக்கும் உரியது. இவ்வைந்திைேடு இரவில் தூய்மையில்லாத உணவைப் புசியாமை, சந்தனம் முதலிய நறுமணமுள்ள பொருள்களே நுகராமை, பஞ்சணே போன்றவற்றைப் பயன்படுத்தாமை என்ற மூன்றும் சேர்ந்து அஷ்டசீலம் எனப்படும்; இஃது இல்ல றத்தாரில் சற்று உயர்நிலையடைந்தவர்களுக்குரிய ஒழுக்க மாகும். இவ்வெட்டளுேடு நாட்டியம், இசை முதலிய வற்றை விரும்பாமை, பொன், வெள்ளிகளைத் தொடாமை என்ற இரண்டும் சேர்ந்து தச சீலமாகும்; இஃது துறவி களுக்குரிய ஒழுக்கமாகும். சங்கம் : சங்கமே பெளத்த மதத்தின் ஆணிவேர்போல் நின்று'அம்மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரண மாக இருந்தது. சங்கம் என்பது பெளத்த பிட்சுக்களின் கூட்டம். சங்கம் மட்டிலும் நியமிக்கப்பெருதிருந்தால் புத்தர்பிரானுக்குப் பிறகு பெளத்தமதம் நடைபெற் றிராது. பெளத்தர்கள் புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் மும்மணிகளாகப் போற்றுவர். முதன் முதலாகக் காசி நகரத்தில் புத்தர் பெருமான் ஐந்து முனிவருக்கு உபதேசம் செய்து தொடங்கப்பெற்ற சங்கம் நாளடைவில் பெரிதாக வளர்ந்து பல்லாயிரக் கணக்கான துறவிகளேயுடையதாயிற்று. ஆண்பாலாரும் பெண்பாலாரும், சிறுவரும், சிறுமியரும், வறிஞரும் செல்வரும், அறிஞரும் பேதையரும் அனைவரும் சாதி வேறுபாடின்றி சங்கத்தில் இடம் பெற்றனர். இல்லறத் தாருக்கும் துறவறநெறியில் வாழ்வோருக்கும் ஏற்றவாறு இச்சமயத்தில் கொள்கைகள் உள்ளன. மருத்துவ வசதி, கல்வி வசதி, உணவு வசதி முதலிய வசதிகளைக்