பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் காட்டிய நெறி 157 ASAMAMAAAS கொடுத்து துறவிகள் வாழ்க்கையோடொட்டிய சமயத் தொண்டாற்றி வந்ததால், ஏராளமான மக்கள் இந்தச் சமயத்தை மேற்கொண்டனர். அசோக மன்னர் காலத் தில்தான் தமிழ்நாட்டில் பெளத்தசமய்ம் பரவியது என்று ஊகிக்க இடம் உள்ளது. அசோகர் காலத்துக் கல்வெட்டுக்களாலும் விகாரைகளாலும் தூபிகளாலும் இதை ஊகிக்கலாம். சங்கத்தில் சேரும் முறை : தொடக்கத்தில் எல்லோரும் சங்கத்தில் சேரலாம் என்ற விதி இருந்தது. நாளடைவில் சில நியமங்கள் விதிக்கப்பெற்றன. தொத்து நோய்களால் பீடிக்கப்பெரு திருத்தல், கடனில்லாதிருத்தல், அரசசேவையில் ஈடு படாதிருத்தல், தாய் தந்தையரது இசைவுபெறல் முதலி யவை துறவியாவதற்கு நடைமுறை விதிகளாக அமைந்தன. தொடக்கத்தில் தலையை மழித்துக் கொண்டு துவராடையை உடுத்திக்கொண்டு த்ன்ரியாக இருந்தாலே பிட்சுத் தன்மை அடைந்துவிட்டதாகக் கருதப்பெற்றது. நாளடைவில் இதிலும் மாற்றம் ஏற். பட்டது. இருபது ஆண்டு நிறைவு எய்தியவர்கள் நேராகவே துறவியாகி சங்கத்தில் சேர்ந்துவிடலாம் ; எட்டுமுதல் இருபது வயதுள்ளவர்கள் பிற்காலத்தில் துறவறத்தை ஏற்பதற்கு வேண்டிய சாதனைகளைப் பெற முயன்று கொண்டு சங்கத்தை ஒட்டினவர்களாக இருக்கலாம். துறவு கிலையில் இரண்டுபடிகள் : துறவு நிலையை அடைதலிலும் இரண்டு படிகள் உண்டு. முதற்படியை ப்ரவாஜ்யை என்றும், இரண்டா வது படியை உபஸம்பதையென்றும் வழங்குவர். பிரவாஜ் யையாவது பழையநிலையிலிருந்து நீங்குதல் : உபஸம் பதையாவது பிட்சுக்களின் நிஷ்டையைப் பெற்றுக்