பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வளரும் பயிர் பயிர்த் தொழிற் கலையை நன்கு அறிந்தவர்கள் சிறு பயிர்களே நன்கு கவனித்துப் போற்றில்ைதான் பின் ல்ை அதிக பயனே எதிர்பார்க்க முடியும் என்பதை அறிவர். இது காரணமாகத்தான் பயிர்த் தொழில் செய்வோர் நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்துக் காப்பாற்றி வைக் கின்றனர். சிறு செடிகளே வளர்த்துக் காப்பாற்றும் இடங்களிலும் நாற்றங்கால்களிலும் (Nurseries) அவற்றுக் குப் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள் அதிகக் கவனம் செலுத்தி வருவதைக் கவனித்தால் இவ்வுண்மை நன்கு விளங்கும். சிறந்ததொரு வளர்ப்புத் தோட்டத்திற்குச் சென்று அங்குச் சிறு செடிகள் எவ்வாறு புரக்கப்பட்டுப் பராம்பிக்கப் பெறுகின்றன என்பதைக் கவனித்தால் எதிர் காலத்தில் அச்செடிகள் எவ்வளவு பெரிய தோப்பாகும் என்பதையும், எந்த அளவு மக்கள் சமுதாயத்திற்கு அவை பலன் கொடுக்கும் என்பதையும் முன்னதாகவே ஒரளவு கூறிவிடலாம். கோடுர் முதலிய இடங்களில் ஆரஞ்சுச் செடிகளும், சேலம் போன்ற இடங்களில் ஒட்டு மாங்கன்றுகளும், திருச்சி குளித்தலை வழியிலுள்ள எட்டரை, கோப்பு என்று ஊர்களில் கத்தரிச் செடிகளும் இவ்வாறு கவனிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறே நெற்பயிர், கரும்பு முதலியவையும் பிற இடங் களில் நன்கு கவனிக்கப்படுகின்றன. கோயம்புத்துரர் விவசாயக் கல்லூரியில் பல பயிர்கள் இங்ங்ணம் நன்கு கவனம் செலுத்தப்பெறுகின்றன. பயிர்த் தொழிலுக்குச் சிறு பயிர்கள் மிகவும் முக்கிய மாக இருத்தல்போலவே, மக்கட் சமுதாயத்திற்குச் சிறு