பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 காலமும் கவிஞர்களும் ........................--ഹ اسمیم பொருளாதார நிலையினை உயர்த்த வேண்டும். என்ன தான் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய் தாலும், பாடத்திட்டங்களே மாற்றியமைத்தாலும் அதி காரத்திலுள்ளவர்கள் பல சுற்றறிக்கைகளேயும் உத்தரவு களையும் பிறப்பித்தாலும் ஆசிரியர்களின் பொருளாதார திலையினை உயர்த்திலைன்றிக் குழந்தைகளின் கல்விப் பொறுப்பில் அரசாங்கம் ஒருவித நல்ல பலனையும் எதிர் பார்க்க முடியாது. ஆசிரியர்களின் நிலையினேச் சிறிதும் கவனியாது வெறும் கல்விச் சீர்த்திருத்தங்களே மட்டிலும் கவனிப்பது அடிப்படையில் பலம் இல்லாத பண்ழய வீட்டைச் சீர்திருத்துவது போலாகும் ; வெறும் பூச்சு வேலையாலும் வண்ண வேலையாலும் யாது பயன் ? கட்டடத்தின் பலத்துக்கு அவற்ருல் ஒன்றும் செய்ய முடி யாதே. மேடைகளில் சிலர் சுட்டுகிறமாதிரி, பழைய காலத்து குருகுல வாழ்க்கையில் ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் வாழவில்லையா என்று சுட்டிக் காட்டினுல் போதாது; சமுதாயம் அன்றிருந்த மாதிரி இன்றுள்ளதா? அன்றைய சூழ்நிலை என்ன ? இன்றைய சூழ்நிலை என்ன என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்தால் இம்மாதிரியான எண்ணம் எழுவதற்கே இடமிருக்காது. வாழ்க்கை நிலையினே உயர்த்தும் பொறுப்பு அரசாங் கத்தினிடமிருந்தாலும், ஏனேய நிலைகளையெல்லாம் உயர்த்திக்கொள்வது ஆசிரியர்களிடந்தான் உள்ளது. தங்கள் அறிவை அதிகமாக வளர்த்துக் கொள்வதுடன், உயர் ந் த எண்ணங்களையும் குறிக்கோள்களையும் கொண்டு எடுத்துக்காட்டான ஒழுக்க சீலர்களாக வாழ் வதற்கு முயற்சி செய்யவேண்டும். இன்றைய வாழ்க் கைக்கு வருவாய் ஒரு பெருங்காரணமாக இருந்தாலும், பிறர் மதிக்கத் தக்கவாறு இருப்பதற்கு ஏனைய கூறு: களும் உள்ளன என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் தெரிய வரும். வெறும் கட்டடங்களேயும் ஏனைய தள