பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் பயிர் }{菇 வாடங்களையும் பெருக்கிக் கொண்டால் மட்டிலும் ஒரு கல்லூரியோ பல்கலைக் கழகமோ உயர்வு அடைய முடி யாது ; அவையெல்லாம் கட்டாயம் தேவைதான். இருந்தாலும், எல்லாவற்றிலும் உயர்ந்த்தாக வைத்து எண்ணக் கூடியது அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் கூட்டந்தான் என்பதை மறக்கக் கூடாது; ஆசிரியர் களின் ஆளுமைதான் (Personality) எல்லாவற்றை யும் விட, பரிமளிக்கக் கூடியது. பண்டைக் காலத் தில் ஆசிரியர்களுக்கு சமூகத்தில் எவ்வளவு மதிப்பு இருந்தது என்பதைக் கூட, மகாகவி கம்பன் ஓரிடத் தில் சுட்டியுள்ளான். இராமலட்சுமணர்களுடன் மிதி இலக்கு வந்த விசுவாமித்திர முனிவர் சனக மகா ராசனின் வேள்விச் சாலைக்கு வருகின்ருர்; மூவரும் சன கன் அருகில் அமர்கின்றனர். இராமலட்சுமணர்களின் முகத் தழகு சனகன் கண்களைக் கொள்ளே கொள்ளு கின்றது; அந்த அழகைத் தனது இரு கண்களாலும் பருகி அவர்களே யாவர் என்று வினவுகின்ருன் சனகன். விசுவாமித்திரர் அவர் க ள் தசரதனுடைய புதல் வர்கள் என்றும், வசிட்டமாமுனிவரிடம் கல்வி பயின்று வளர்ந்தவர்கள் என்றும் அறிமுகம் செய்து வைக் கின்ருர். " திறையோடும் அரசிறைஞ்சும் செறிகழற்காற் தசரதனும் பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வரெனும் பெயரேகாண் ! உறையோடு நெடுவேலாய் ! உபநயன விதிமுடித்து மறைஒது வித்(து) இவரை வளர்த்தானும் வசிட்டன் காண்” என்பது கம்பனின் வாக்கு. 2. கம்பரா.பாலகா’-குலமுறை-24.