பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 36 காலமும் கவிஞர்களும் ہد-یہ۔ حمتہ رحمتہ یہ مبہم ہے۔

  • பெற்ற காரணத்தால் தசரதனுக்குப் பெயரளவில் புத்திரர்கள் என்ருலும், இவர்களுக்கு உபநயனம் முடித்து, கல்வி முதலியவற்றைக் கற்பித்து வளர்த்த தெல்லாம் முனி சிரேட்டராகிய வசிட்டனே' என்று கூறும்பொழுதுதான், ஆசிரியனே எவ்வளவு உயர்ந்த நிலையில் வைத்துக் கம்பன் பேசுகின்றன் என்பது தெரிய வரும். வசிட்டனுக்குள்ள பெருமை, தசரதச் சக்ர வர்த்திக்குக் குருவாக இருந்ததல்ை அல்ல ; அவன் அளித்த உயர்வாலும் பிறவற்றலும் அல்ல; அவரது பெருமைக்கெல்லாம் அவரேதான் காரணம்.
நன்னிலக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

நிலகலக்கிக் கீழிடு வானும், நிலையிலும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னேத் தலையாகச் செய்வானும் தான்’’’ என்ற சமண முனிவரின் திருவாக்கை ஆசிரியர்கள் எண்ன்ப் பார்த்தால் இவ்வுண்மை விளங்காமற் போகாது. இவற்றையெல்லாம் சிந்தித்து ஆசிரியர்கள் தமது வாழ்க்கையினைத் திருத்தி அமைத்துக் கொள்வார் களானல், சமுதாயம் அவர்களைக் கட்டாயம் நன்கு மிதிக்கத்தான் செய்யும். இன்றைய சமுதாயத்தில் சமுதாயத்தின் வளரும் பயிர்களாகிய குழந்தைகள் நல்ல நிலையில் வளர்ந்து, வருங்காலத்தில் உயர்ந்த சமுதாயத்தை உண்டாக்கு வது ஆசிரியர்கள் கையில் மட்டிலும் இல்லை. இதில் வேறு இருவரது பொறுப்பும், உள்ளது. கல்விக் கூடங்களை ஆட்சி புரிபவர்களுக்கும் பெற்ருேர் களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு என்பதை அவர்கள் அறிய வேண்டும். ஒரு பள்ளிக்கூடத்தை வருங்கால மனிதப் பயிர்கள் வளரும் சமபக்க 3. நாலடியார்.248