பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wൾക്ഷ്:

  1. 88 காலமும் கவிஞர்களும்

கவனிக்கின்றனர். கல்விச்சாலைகளில் பாடநேரத்தில் அவ்வாறு கவனம் செலுத்துவதுகூட இல்லை. இந்தச் சூழ்நிலையில் வளரும் பயிர்கள் எங்ஙனம் கல்வி பெறுவது? சிந்தித்துப் பார்த்தால் மனத்திற்கு மிக்க வருத்தத்தைத் தான் தருகின்றது. உலகிலுள்ள உயிர்ப்பிராணிகளையும் மனிதனையும் உற்றுக் கவனித்தால் பலவித உண்மைகள் தெரியவரும். படைப்பு ஏணியிலேயே மனிதன்தான் உயர்ந்த, உன்னத நிலையிலிருக்கின்ருன் கூர்தல் அறக் கொள்கை a?sirutq-Guj (Doctrine of Evolution) unsofgisir:;rsir உயர்ந்த நிலையிலிருக்கின்ருன் ; பிற உயிர்களுக்கும் மணி தனுக்கும் இயல்பான தொடர்புகளே இல்லையென்று கூடச்சொல்லலாம். படைப்பு ஏணியின் கீழ்ப்படியி லுள்ள பிராணிகளின் வாழ்க்கையெல்லாம் இயல்பூக்கங் களின் (Instincts) அடிப்படையில் அமைந்துள்ளது ; ஏணியின் மேற்படிக்குப் போகப்போக அவைகளின் வாழ்க்கை அறிவின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காணலாம். ஏணியின் உயர்ந்த படியில் இருக்கும் குரங்கின் வாழ்க்கை கிட்டத்தட்ட அறிவு நிலையின் அடிப் படையிலிருப்பதையும் அதற்கு மேற்படியிலுள்ள மனித னுடைய வாழ்க்கை, முழுவதும் அறிவின் அடிப்படை யிலமைந்திருப்பதையும் அறிய முடிகின்றது. மேலே செல்லச் செல்ல உயிர்ப் பிராணிகளின் வாழ்க்கையில் இயல் பூக்கங்களின் ஆதிக்கம் குறைந்துகொண்டு வந்து, மனிதனிடம் அவற்றின் ஆதிக்கம் மிகக் குறைவாக இருப் பதைக் காணலாம். விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் தம் அதுபவத்தை மறந்து மீண்டும் விளக்கில் விழுவ தையும், ஒரு தடவை நெருப்பைத் தொட நேர்ந்த குழந்தை மீண்டும் நெருப்பைத் தொட அஞ்சுவதையும் கவனித்தால், இவ்வுண்மை நன்கு விளங்கும். கீழ் நிலை யிலுள்ள பிராணிகளுக்குத் தம் முன் அநுபவம் பயன்படா