பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 காலமும் கவிஞர்களும் SAASA SAASAASSAAAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAAS AAASASAAAAAS AAASASASS AAAAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAASAASAASAASAASAA AAAS வரையிலும் பிறருக்குப் பயன் தராதது போலவே, மாணக் கனும் கல்வியைத் தவிர வேறு துறைகளில் கவனத்தைச் சிதற விடாதிருத்தல் வேண்டும். அஃதாவது, அரசியல் கட்சி வேறுப்ாடுகள் முதலியவைகளில் தனது கவனத் தைச் செலுத்தக்கூடாது. மரம் முழு வளர்ச்சி எய்தியதும் சமுதாயத்துக்குப் பல விதங்களில் பயன் தந்து உதவுவது போலவே, மாணுக்கனும் தன் கல்வி முற்றுப் பெற்ற பிறகுதான் பொதுவாழ்வில் இறங்கிப் பொது விவகாரங் களில் தலையிடுதல் வேண்டும். சில மரங்கள் தக்க வளர்ச்சி யடைவதற்கு முன்பே பலன் கொடுக்கத் தொடங்குவதுண்டு. இவ்வாறு பலன் அளிப்பதைக் கண்டால் தோட்டக்காரனுக்கோ உழ வனுக்கோ கவலை ஏற்படும். இவ்வாறு மரம் பலன் அளிக்கத் தொடங்கில்ை அது மரத்தின் வளர்ச்சிக்கே கேடு தருவதுடன் அதனுடைய ஆயுளும் கெட்டு எதிர் காலத்தில் தான் எதிர்பார்க்கும் பலனும் கிடைக்காது போகும் என்ற கவலை தோட்டக்காரன் மனத்தை வாட்டும். இளமையிலேயே பலன்தருவதைக் கண்டால் பூவைக் கிள்ளி யெறிந்தும் பிஞ்சுகளைப் பிய்த்தெறிந்தும் பிறவற்றைச் செய்தும் தோட்டக்காரன் அம் மரம் பலன் தராதவாறு செய்து விடுவான். இங்ங்னமே கல்விக் கூடங்களில் பயின்றுவரும் மாணுக்கனும் தன் கல்வி கயில் நாட்டம் செலுத்துவதை விட்டு அரசியல் கட்சி சமூகச் சீர்திருத்தக் கட்சி முதலிய கட்சிகளில் கலந்து கொண்டு திரிந்தால், ஆசிரியருக்கும் பெற்ருேருக்கும் பள்ளி ஆட்சியினருக்கும் அது கவலையைத் தரக்கூடிய தாகவே யிருக்கும். அவர்கள் அம்மாளுக்கனின் நன்மை யின் பொருட்டும், அவனுடன் சேர்ந்து பயிலும் பிற மாணக்கர்களின் நலத்தை முன்னிட்டும், அவன்மீது தக்க நடவடிக்கை யெடுத்து அவனைத் திருத்துவதற்கு முயல்வர். இஃது அவசியம் செய்யப்பெற வேண்டிய