பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதையும் கற்பனையும்

15



“அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண் ;
பிறையெனச் சுடரும் சிறுநுதல் ; பிறையின்
நிறையெனத் தோன்றும் கறையில் வாண்முகம்;
அரவென துடங்கும் மருங்குல்; அரவின்
பையெனக் கிடந்த ஐதேந் தல்குல்
கிளியென மிடற்றும் கிளவி ; கிளியின்
ஒளிபெறு வாயின் அன்ன ஒள்ளுகிர் ;
வாழையந் தாளுறம் குறங்கின் வாழைக்
கூம்புமுகி ழன்ன வீங்கிள வனமுலே ;
வேயெனத் திரண்ட மென்றேள் ; வேயின்
விளங்குமுத் தன்ன துளங்கொளி முறுவல்;
காந்தள் முகிழன்ன மெல்விரல் ;
காந்தள் பூந்துடுப் பன்ன புன்வளை முன்கை
அன்னத் தன்ன மென்னடை”

[1]

இது கேசாதி பாத வருணனை. பொருநராற்றும் படையிலுள்ள விறலியின் வருணனையும் இத்தகையதே. இவைகளில் தாம் கண்ட பல காட்சிகளைக் கவிஞர்கள் ஒருங்கு சேர்த்துத் தருகின்றனர்.

இம்மூன்று காட்சிகளிலும் கவிஞர்கள் தாம் கண்டவற்றை ஒருங்கு சேர்த்துப் புதிய உருவங்களைச் சமைத்துள்ளனர். காட்சிகளில் புதியதொரு பண்பு இல்லை; காட்சிகளிலும் யாதொரு மாற்றமும் இல்லை. இம்மாதிரியான கற்பனைகளைப் ‘படைப்புக் கற்பனை’ என்ற வகையில் அடக்கலாம். கவிஞகுெருவன் தன் அநுபவத்தில் கண்ட பல பண்புகளே ஒருவிதக் கட்டாயமுமின்தித் தானகத் தேர்ந்தெடுத்து அவற்றினேத் தொகுத்துப் புதிய தொரு வடிவினை உண்டாக்குவதுதான் படைப்புக் கற்பனையாகும்.[2]


  1. பெருங்கதை-4-11 : 64-19.
  2. The creative imagination spontaneously selects among the elements given by experience and combiues them into new wholes : If this combination be arbitray or irrational, the faculty in called Fancy.—C. T. Winchester.