பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

காலமும் கவிஞர்களும்


"மன்னர் விழித்தா மரை பூத்த மண்டபத்தே
பொனின் மடப்பாவை போய்புக்காள்--மின்னிறத்து
செய்தாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய்ப் போவதே போன்று"[1]

என்று புகழேந்தி வருணிக்கின்றார். மற்று, காட்டில் நள்ளிரவில் தமயந்தி தூங்கும்பொழுது அவளுடன் உறங்கிய நளன் அவள் ஆடையில் பாதியைக் கிழித்துத் தான் உடுத்திக்கொண்டு அவளை விட்டுப் பிரிந்தகாலை, விழித்தெழுந்த தமயந்தி கணவன் பிரிவுக்கு ஆற்றாது, தலைவிரி கோலமாகத் தரையில் வீழ்ந்த நிலையைப் புகழேந்தி,

“வான்முகிலும் தின்னும் வறு நிலத்து வீழ்ந்ததுபோல்
தானும் குழலும் தனி வீழ்ந்தாள்" [2]

என்று அழகுபடக் கூறுகின்றார். இந்த இரண்டு வருணனைகளில் இருகாட்சிகள் இணைக்கப்பெற்று இருப்பதைக் கண்டு மகிழ்க .

கலிங்கத்துப் பரணியில் ஒரு காட்சியை மட்டிலும் கண்டு மேலே செல்வோம். போருக்குச் சென்ற வீரர்கள் ஊடிக் கதவடைத்து நிற்கும் மகளிரைக். கதவைத் திறக்குமாறு விளிக்கும் பகுதியில் ஒருபாடல்

"முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன் செல்வ மில்லாத அவர் பெற்ற பொருள் போல்
கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே
கண்ணுற்று நெஞ்சங்களிப்பீர்கள் திறமின்"

[3]

இதிலும் இரண்டு காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. காட்சிகளை மனக்கண்முன் கொண்டு நிறுத்தி மகிழ்க.

மூன்றாவது வகை : இனி, மூன்றாவது வகைக் கற்பனையை நோக்குவோம். கவிஞன் தான் கண்ட


  1. நளவெண்-131
  2. ஷை-282
  3. கலிங்கத்துப் பரணி- தாழிசை. 47