பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் YSAASAASAASAASAAeeeS eeeS ഹ-്.--ഹ-----ഹTamilBOT (பேச்சு) 14:27, 11 பெப்ரவரி 2016 (UTC)്TamilBOT (பேச்சு) 14:27, 11 பெப்ரவரி 2016 (UTC) TamilBOT (பேச்சு) னுடன் உயிர்போல் மருவியிருந்த கைகேயி ' கோமுடி நாளேச் சூடவிருந்த இராமனை ’க் காட்டிற்கு அனுப்ப எண்ணியதால், இரவாகிய பெண் இச்செய்கை பெண் ணினத்திற்கே என்றும் நீங்காத வசை என்று எண்ணி ஆடவர்முன் நிற்கவும் கூசி மறைந்தாள் என்று கூறுகின் ருன் கவிஞன், இராமன் முடி சூடவிருந்த முதல்நாள் இரவு தசரதன் கைகேயியுடன் நெடுநேரம் மன்ருடிய தையும் பலனின்றி உளமுடைந்து நிற்கும் மனநிலையை யும் பல கவிதைகளால் உரைத்த கவிஞன் படிப்போரின் துயருணர்வு மிகுந்துள்ள நிலையை மாற்றி ஆறுதலளிக் கும் பொருட்டு இப்படி ஒரு கற்பனைப் பேச்சை இடை யில் நூழைத்துள்ளான். இந்தக் கட்டத்தில் விடியற்காலத்தில் கோழி கூவு கின்ற செய்தியைக் கூறுவதில் கவிஞனின் உயிர்நாடி பேசுகின்றது. கோழி கூவும் ஒலியைக் கேட்கும் கவிஞ னின் உணர்ச்சி பாடலில் கொப்புளித்து நிற்கின்றது. "

  • எண்ட ருங்கடை சென்ற யாமம் இயம்பு கின்றன. ஏழையால் வண்டு தங்கிய தொங்கல் மார்பன்

மயங்கி விம்மிய வாறெலாம் கண்டு நெஞ்சு கலங்கி அஞ்சிறை யான காமர் துணைக்கரம் கொண்டு தம்வயிற் றெற்றி யெற்றி விழிப்பு போன்றன கோழியே' " கைகேயியின் கொடுஞ் செயல் கண்டு சகியாமல் 'ஐயையோ ! இந்தப் பழிகாரி செய்த அநியாயத்தைப் பார்த்தீர்களா ! அந்தோ, பெருத்த அநியாயம் !" என்று சிறகுகளால் மார்பில் அடித்துக்கொண்டு அலறி உலக மக்களே நோக்கிக் கோழி ஒலமிடுவதாகக் கூறும் கவிஞன் கூற்றில் உணர்ச்சி பொங்கி ஒழிகின்றது. அயோத் , கைகேயி சூழ்வின-47