பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இயற்கைக் கூத்து கண்ணுல் காணும் நிகழ்ச்சிகளைக் கவிதைகளில் பாய்ச்சி அலங்கரிக்கின்றனர் கவிஞர்கள். சங்க காலத்தி லிருந்து இன்றுவரை தமிழ் இலக்கியக் கருவூலத்தை அணிசெய்து நிற்கும் இலக்கியங்களைப் படிப்போ மானுல் இவ்வுண்மை நன்கு விளங்கும். இயற்கை வாழ்வில் தோய்ந்து இயற்கைக் காட்சி களைக் கண்ணுற்று மகிழும் சங்ககாலப் புலவர்கள் இயற்கையையே குழைத்துத் தமது பாடல்களில் கலந்துள்ளனர். உள்ளவற்றை உள்ளபடியே கூறிலுைம், அவர்கள் படைத்துக் காட்டும் சொல்லோவியம் நமது உளக் கோவிலில் நன்கு தீட்டப்பெற்று விடுகின்றது. சங்கப் புலவர்களில் கபிலர் தலசிறந்தவர்; Lიზ·ა நாட்டு வளங்களைச் சிறப்பித்துப் பாடுவதில் வல்லவர். பெரும்பாலும் அவர் பாடல்கள் குறிஞ்சி நிலத்தைப் பற்றிய வருணனைகளைக் கொண்டவைகளாகவே இருக் கின்றன. அவர் காட்டும் ஒரு காட்சி : மேகம் தவழும் மதில ஒருபால் அண்ணுந்து நிற்கின்றது. மலைச் சாரல்களில், பக்க மலைகளில் மூங்கில்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன ; அவை கோடைக் காற்ருல் கம்பீரமாக ஆடி அசை கின்றன. மூங்கிற் சோலேக்கருகில் ஒர் அழகிய அருவி ஒடுகின்றது ; அதில் பளிங்கு போன்ற நீர் இழும் என ஒலித்து மேலிருந்து பள்ளத்தாக்கை நோக்கிப் பாய் கின்றது. அத்தகைய அருவியின் அருகில் கலைமான் கூட்டமொன்று தாழ்ந்த குரலே எழுப்பிக் களிப்புடன் விளையாடிக்கொண் டிருக்கின்றது. மலேச்சாரல்களில்