பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயற்கைக் கூத்து

31


கிறது கலைமான் கூட்டங்கள் தாழ்ந்த குரலே எழுப்பி விளையாடுவது வங்கியம் என்ற வாத்தியம் இயங்குவது போலுள்ளது. மலர்களே நாடி நிற்கும் வண்டுகளின் பாட்டொலி யாழோசை போலிருக்கின்றது. "இத்திறத்தினையுடைய பக்கவாத்தியங்களுடன் மயில் ஆடுகின்றது என்று கபிலர் காட்டும் சொல்லோவியம் :

ஆடமை குயின்ற அவிர்துளே மருங்கில்
கோடையவ்வளி குழல் இசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதை குரலாகக்
கணக்கலை இகுக்கும் கருங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ் ஆக
இன்பல் இமிழ் இசை கேட்டுக் கலிசிறந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில்
நனவுப்புகு விறலியில் தோன்றும்.........!

[1]

[ஆடு அமை-அசையும் மூங்கில்; குயின்ற-துளைக்கப் பெற்ற ; கோடை அவ்வளி-மேல்காற்று ; குழல்-புல்லாங்குழல் ; பனி நீர்-குளிர்ந்த நீர் ; தோடு அமை-தொகுதியாக அமைந்த ; முழவு-மத்தளம் ; துதை குரல்-நெருங்கிய இசை; கணக்கலை-கூட்டமான கலைமான்கள் ; துாம்பு-யானைத் துதிக்கை போன்ற வங்கியம் என்ற ஒருவகை வாத்தியம் : இன் பல்-இனிய பலவாகிய ; இமிழ்-ஒலிக்கும் ; கலி சிறந்து-ஆரவாரம் மிக்கு ; கழை-மூங்கில் ; அடுக்கத்து-பக்க மலையில் ; இயலி ஆடும் மயில்-உலாவி ஆடுகின்ற மயில்கள் ; நனவு-நாட்டியம் ஆடும் களம் ; விறலியில்-விறலி போன்று]

இம்மாதிரியான நடனக்காட்சி ஒன்றைச் சீத்தலைச் சாத்தனர் என்ற புலவர் ஒருவர் காட்டுகின்றார். சங்க இலக்கியங்களைப் பயின்ற அநுபவத்தால் இக்காட்சியை அமைத்தாரோ அல்லது தாமாகவே அமைத்தாரோ


  1. அகநானூறு 82.