பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

காலமும் கவிஞர்களும்



மேற்கூறிய இருவரைப் பின்பற்றியே தமது காவிய மாகிய சுவர்க்க நீக்கத்தை எழுதினாரெனினும், அவருக்கு முன்னிருந்த கவிஞர்களைவிட தமது காவியப் படைப்பால் அழியாப் புகழ்பெற்றார். சுவர்க்க நீக்கத்தின் தலைவனாகிய சாத்தானின் விடாப்பிடியான தீவிரமான மனவேதனை தற்கால மாந்தரின் அறநெறி பற்றிய கருத்தினை எடுத்துக் காட்டும்படியாக அமைந்துள்ளது. இதுகாறும் பெருங்காப்பியத் தலைவர்கள் மனிதரில் ஒரு தேவன்போல் (Superhuman) இருந்தனர். ஆனால், மில்டனின் காப்பியத் தலைவன் ஒரு தேவனாகவே (Supernatural) இருக்கின்றான். எல்லாக் காலத்திற்கும் பொருந்தும்படியான பல அரிய கருத்துக்களைக் கொண்டு காப்பியத்தை ஆக்கியுள்ளார் மில்டன். மேனாட்டு அறிஞர் பெருங்காப்பியங்கள் பற்றிக் கூறியிருக்கும் கருத்துக்களை ஆறு பகுதியாகப் பிரித்து வைத்துக்கொண்டு அவை எவ்வாறு பாரதியின் காப்பியத்திற்குப் பொருந்துகின்றன என்பதைக் காண்போம்.

முதலாவது : தேர்ந்தெடுக்கும் கதைப் பொருள் ஒரு காப்பியத்துக்கேற்றவாறு சிறப்புடையதாக இருக்க வேண்டும். அது வாழ்க்கையின் உயிர்நாடியாகவுள்ள தவிர்க்க முடியாத ஊழ்வலியை உணர்த்தவல்லதாக இருப்பதுடன் மனித அநுபவத்தையொட்டியும் இருக்க வேண்டும். இவ்விடத்தில் ஆங்கில அறிஞர் லாஸ்லெஸ் அபெர்குரோம்பி* என்பார் கூறியிருப்பது கவனித்தற்குரியது : கதை உண்மையானதாக இருத்தல் வேண்டும். இக்கதையை நடுவாக அமைத்து வேறுபல நிகழ்ச்சிகளும் இத்துடன் சேர்த்து இணைக்கப் பெறலாம். இவை எவ்வளவு சிறந்தவையாக இருப்பினும், இவை யாவும் முதற் கதையைச் சிறப்பித்து


*Lascelles Abercrombie: The Epic பக்கம் 105