பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் பாஞ்சாலி சபதம்

45



“காண்தகு வில்லுடை யோன்-அந்தக் காளை அருச்சுனன் கண்களிலும் மாண்தகு நிறல் வீமன்-தட மார்பிலும் என திகழ் வரைந் துளதே”

என்று துரியோதனன் மனநிலையைப் புதிய அழகுடன் கூறும் கவிஞனின் திறன் எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. இந்தக் கட்டத்தில் பாரதி துரியோதனன் மனநிலையைக் காப்பியத்திற்கேற்ற விரிவுடன், மக்கள் மனோதத்துவ உண்மைகள் பொலியுமாறு புனைந்து காட்டுவது நம்மைச் சுவையின் கொடு முடிக்குக் கொண்டு செல்கின்றது. துரியோதனனின் பொறாமைத் தீ, “நீள்வதால் உள்ளம் நெக்குருகிப் போய், மஞ்சன் ஆண்மை மறம்திண்மை மானம் வண்மை”

யாவற்றையும் மறக்கும்படி செய்து விடுகின்றது. அன்றியும்,

“யாது நேரினும் எவ்வகை யானும் யாது போயினும் பாண்டவர் வாழ்வைத் தீது செய்து மடித்திட”

எண்ணும்படியும் அதைச் செய்விக்கவும் தூண்டுகின்றது. அந்தப் பொறாமைத் தீ தான் சூதும் பொய்யும் உருவெனக் கொண்ட துட்ட மாமனுடன் ஆலோசனை செய்து பாண்டவர்களே வஞ்சனையாகச் சூதுக்கிழுக்கத் தூண்டுகின்றது. சூதின் முடிவுதான் பாஞ்சாலியின் சபதத்திற்கு வித்திடுகின்றது; அதிலிருந்து பாரதப்போர் முளைத்து வளரத் தொடங்குகின்றது.

-ஒம்

“தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்; பாவி துச்சாதனன் செந்நீர்,-அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,”