பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

காலமும் கவிஞர்களும்



“மேவி யிரண்டும் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக்குழல் முடிப்பேன் யான் -இது
செய்யு முன்னே முடியேன்”.

என்பது திரெளபதி உரைத்த சபதம் ; இதுவே காவியத்தின் மகுடமாகவும் திகழ்கின்றது. காவியத்தின் இறுதிப் பாகமாகிய துகிலுரிதல் சருக்கமும், சபதச் சருக்கமும் அதியற்புதமான படைப்புக்கள் என்றே சொல்லவேண்டும். இந்தக் கட்டங்களில் பாரதியையும் வில்லியையும் ஒப்பிட்டு நோக்கினல் பாரதியின் பேராற்றல் புலனாகும். பாண்டவர்கள் அனைத்தையும் தோற்ற பிறகு துரியோதனனுடைய அவையில் நடைபெறும் அக்கிரமங்கள் வில்லி பாரதத்தில் சாதாரண முறையில்தான் சித்திரிக்கப் பெற்றுள்ளன. பாரதியின் காப்பியத்தில் இக்கட்டங்கள் உயர்ந்த சோக நாடகத் தன்மையுடன் கையாளப் பெற்றிருக்கின்றன. கேட்டவுடன் நெஞ்சு பொறுக்க முடியாத பல அக்கிரமங்கள் அரசவையில் நடைபெறுகின்றன. அவையிலிருந்த ‘கேள்வி பல உடையோர், கேடில்லா நல்லிசையோர், வேள்வித் தவங்கள் மிகப்புரிந்த வேதியர்கள், மேலோர்’ முதலிய யாவரும் அவ்வடாத செயல்களைத் தடுக்க முடியாது மணஞ்சோர்ந்து மூங்கையர்போல் வாளா இருக்கின்றனர். அறமே வடிவெடுத்தாற் போன்ற தருமன் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ‘சும்மா’ இருக்கின்றான். துரியோதனன் முதலிய தீயவர்கள் தங்கள் சூழ்ச்சி பலித்ததென்று கொக்கரித்துக் கொம்மாளம் அடிக்கின்றனர். அண்ணன் ஏது சொன்குலும் மறுத்திடாதவனும் தீமையில் அண்ணனை வென்றவனுமான துச்சாதனன் திரெளபதியை வன்மையாக இழுத்துவந்து உலகில் எங்கும் கேட்டிராத முறையில் அவமானப்படுத்துகின்றான். இதைக் கண்ணுறும் வீமன் குமுறியெழும் தன்