பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் பாஞ்சாலி சபதம்

47



வெஞ்சினத்தை அடக்க முடியாது அண்ணனைப் பழித்துப் பேசுகின்றான். ‘எல்லாவற்றையும் இழக்கப் பொறுத்திருந்தோம். துருபதன் மகளையும் இழந்து அவளை இவர்க்கு அடிமை செய்தாய்’ என்று கூறி சகாதேவனைப் பார்த்து,

“இது பொறுப்ப தில்லை ; - தம்பி !
எரி தழல் கொண்டு வா
கதிரை வைத் திழந்தான்-அண்ணன்
கையை எரித் திடுவோம்”

என்று கூறுகின்றான். இதனைக் கேட்ட வீரமே உருவெடுத்த அருச்சுனன் இவ்வளவு கொடுமைக்கிடையிலும் தன் மனநிலையைக் காத்து,

"மனமாரச் சொன்னாயே ? வீமா ! என்ன
வார்த்தை சொன்னாய் ? எங்குசொன்னாய் யாவர் முன்னே ?
கனமாருந் துருபதனார் மகளைச் சூதுக்
களியிலே இழந்திடுதல் குற்றம் என்றாய் ;
சினமான தி அறிவைப் புகைத்த லாலே
திரிலோக நாயகனேச் சினந்து சொன்னுய் ;”

* * *

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் என்னும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான் ;
கருமத்தை மேன்மேலும் காண்போம் ; இன்று
கட்டுண்டோம் ; பொறுத்திருப்போம் ; காலம் மாறும் ;
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம் ;
தனுவுண்டு காண்டீவம் அதன் பேர்’

என்று கூறி வீமன் சினத்தைத் தணிவிக்கின்றான். கண்ணன் அருளால் திரெளபதி மானங்காக்கப் பெறுகின்றாள். வீமன், அருச்சுனன், பாஞ்சாலி ஆகிய